தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில்
முருகானந்தம் இஆப, நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள், சட்டத்துறையின் உயர் அதிகாரிகள் நியமனம், ஓய்வூதியம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் ஆகியோர் நாளை நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டனர். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இஆப சமீபத்தில் பொறுப்பேற்றதால், அவர் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், காணொளிக் காட்சி மூலம் ஆஜராவார் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி :-, தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்ததோடு, சொல்ல விரும்பும் கருத்துகளை நேரில் ஆஜராகிக் கூற என்ன தயக்கம்?" எனக் கேள்வி எழுப்பினார்.
கருத்துகள்