'ஓட்டுக்காக முருகனை கையில் எடுத்துள்ளார்கள்'- பாஜகவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்-
'பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது'-முருகன் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரண்டு நாட்கள் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இன்று காணொளிக் காட்சி வாயிலாக மாநாட்டைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாட்களில் மாநாடு நிறைவடைந்தாலும் ஒரு வாரம் வரை மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட அரங்கம் மற்றும் பொருட்காட்சி அரங்கம் போல கண்காட்சி ஆகியவை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்
கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''முத்தமிழ் முருகன் மாநாடு என்பது ஓட்டுக்கான ஒரு உத்தி இது. ஓட்டுக்காக எதையும் இவர்கள் செய்வார்கள்.
ஆன்மீகத்தைக் கையில் எடுக்கவில்லை என்றால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் தான் தற்பொழுது திமுக முருகனைக் கையில் எடுத்துள்ளது. அண்ணாவின் தமிழை பின்பற்றிய இவர்கள் தற்பொழுது ஆண்டாளின் தமிழையும் பின்பற்றுகிறார்கள்.
ஜனாதனத்தை எதிர்ப்பவர்கள் கூட ஆன்மீகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது. ஓட்டுக்காக இல்லாமல் நாட்டுக்காக இருக்கும் முருக பக்தர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' எனத் தெரிவித்தார். அரசியல் மாநாடு கேள்விப்பட்ட அனுபவம் நமக்கு உண்டு அது என்ன கடவுள் பெயரால் மாநாடு, கடவுள் பெயரால் திருவிழா, அன்னதானம், காவடி எடுத்தல் சரி அல்லது மடாதிபதிகள் மற்றும் சன்யாசிகள் முருக பக்தர்கள் மாநாடு என்பதே சரியான நேர்வாகவோ அல்லது தேர்வாகவோ அமையும்,
அங்கு வந்தவர்களுக்கு விருந்து உபசரிப்பு உண்டு அதில் சாதம்
ஒய்ட் (வெள்ளை) குருமா! வாழ்க தமிழ்.
ஆனியன் ரைத்தாவா? பிந்தீ பீனட் ஃப்ரையாவா? நம்ம ஊரு
மாரியாத்தா கோவிலில் கூழ் ஊத்துவார்கள்.
பாண்டிக்கோவில், காளி, கருப்பர் கோவிலில் மற்றும் சில (குல தெய்வம்) கோயிலில் கிடா வெட்டு கறிக் குழம்பு உண்டு
இங்கு முருகன் கோயிலில் வெண் பொங்கல் அல்லது தேனும் தினை மாவும் சரி இதான் முறை. ஆனால் இங்கு அயல் நாட்டு உணவு
அரசு வரிப் பணமும் கோயிலில் ஏழைகள் போட்ட உண்டியல் பணமும் வீனாகப் போகிறது. என உண்மை உணர்ந்த ஆண்டு தோறும் கால்நடையாக செல்லும் முருக பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் கரடு முரடான நிலையில் இது குறித்து பல விமர்சகர்கள் அரசு மீது மக்களிடையே வருகிறது, பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் மாதம் 24, 25 தேதிகளில் நடத்துவது தொடர்பாக கடந்த ஏழு மாதமாக தமிழ்நாடு அரசு நிர்வாகம் முழு மூச்சுடன் வேலை செய்கிறது. பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து. 20 நபர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.
குழுவின் தலைவராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு,, உறுப்பினர்களாக அறநிலையத் துறை உயர் அதிகாரிகளுடன் திருவண்ணாமலை ஆதீன கர்த்தார், குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தான ஆதீன கர்த்தார், பேரூர் ஆதீன கர்த்தார், சிரவை ஆதீன கர்த்தார், மயிலம் பொம்மர ஆதீன கர்த்தார் , சிவஞான பாலய சுவாமிகள், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் மு.வெ.சத்தியவேல் முருகனார், சுகி.சிவம், தேச.மங்கையர்க்கரசி, ந.ராமசுப்பிரமணியன் இடம் பெற்றனர். முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ் பெற்ற முருகன் திருக் கோயில்களின் கண்காட்சி அரங்குகள் எல்லாம் திரைப்படக் கலை இயக்குனர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வேல் கோட்டம் என்பதாக மாநாடு அமைக்கப்படுவதோடு, சமயப் பெரியோர்களின் உரைகள், ஆன்மிக ச் சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இம்மாநாட்டில் உலகெங்கும் உள்ள முருகன் ஆலயம் தொடர்புடைய வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும், அதற்கான செலவுகளையும் செய்கிறது. பல லட்சம் பக்தர்கள் இந்த மாநாட்டிற்கு வரக் கூடும் எனத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது இப்படி மக்களை பக்தி மயமாக மாநாடு மூலம் ஆட்சியின் ஊழல் முறைகேடுகள், இயற்கை வளச் சுரண்டல்கள், மக்கள் குறைகளைக் கண்டும் காணாமல் இருந்து வரும் பாசாங்குதனம் ஆகியவற்றை அறிந்து கொள்ளாமல் திசை திருப்பி, தங்கள் நிர்வாக ஊழல் ஆட்சியைத் தொடரலாம் என நினைப்பது சாணக்கியர் காலத்திலிருந்தே ஆட்சியாளர்கள் செய்யும் சூழ்ச்சி முருகன் பெருமைகளைச் சொல்லிப் ஓதுவார்கள் மற்றும் பண்டார சன்னிதிகள் உண்டு புகழ்பாட ஏகப்பட்ட ஆதீனங்கள், மடாதிபதிகள், அமைப்புகள், ஆன்மீகவாதிகள், சொற்பொழிவாளர்கள் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சிக்குப் போட்டியிட்டு அரசியல் செய்வதற்காக திமுக அரசு மக்கள் மற்றும் பக்தியாளர்களை ஈர்க்கும் முன்னெடுப்பை அந்தக் கட்சியின் முன்னோடிகள் பலருமே கூட இது வாக்கு வங்கியாக மாறுமா இல்லை பாதகம் வருமா என்பதை அறியவில்லை அல்லது விருமபவில்லை என்ற நிலையில்,அன்பால் உயிர்கள் ஒன்றாகும்; அறத்தால் உலகம் நன்றாகும். இந்த பக்தி நெறி, தமிழ் நெறிதான் நாளும் தழைப்பதற்கு முத்தமிழ் முருகன் மாநாடு எல்லா வகையிலும் வழிகாட்டும்.
- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்! - பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை. "கடவுள் இல்லை என்று இவர்களாகத்தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள் சர்ச்சையாக பேசிவிட்டு இப்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து . "உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க். குருவாய் வருவாய், அருள்வாய் குகனே". "சம்பந்தன் தன்னைப் பாடினான்; அப்பன் என்னைப் பாடினான்; சுந்தரன் பொன்னைப் பாடினான்". இது ஆதி சிவன் வாக்கு. "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமண்யரை மிஞ்சிய தெய்வமில்லை " எனப் பழமொழி உண்டு. "சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ். செகுத்தவர் ருயிர்க்குஞ் . சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும். திருப்புகழ் நெருப்பென்றறிவோம்யாம்". "முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில். இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வதும் .. ஒருநாளே
கருத்துகள்