அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்னும்
இவரது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதற்கு ஆறாண்டு கால ஆய்வின் தொடக்கத்திற்குப் பின்னர் அது ஒரு அனுமதியைப் பெற்றது என்றே சொல்லாம். அதையடுத்து மனித முடியை விட மெல்லியதாக 64 நெகிழ்வான இழைகளைக் கொண்ட சிப் அறுவை சிகிச்சை மூலம் "இயக்க எண்ணத்தை" கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியில் வைக்க ஒரு ரோபோவை நியூராலிங்க் பயன்படுத்தியது.நியூராலிங்க் மற்றும் அமெரிக்காவின் மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகிய இரண்டும் இணைந்து
மனிதர்களின் உடலில் இது போன்ற சிப்பைப் பொருத்திப் பரிசோதிக்க எலன் மஸ்க்கின் நிறுவனத்திற்கு 2024 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதியளித்தது. இந்த அனுமதியைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குக் கிடைத்த பலனாகவே இது பார்க்கப்பட்டது. அதில் எலென் மஸ்க்கின் ஈடுபாடு நியூராலிங்கின் புகழை மேலும் உலகில் உயர்த்தும் அதே வேளையில், அவர் போட்டியாளர்களையும் எதிர்கொள்கிகிறார். அவர்களில் சிலர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இது போன்ற சாதனைகளைப் புரிந்துள்ளனர். அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தைதா தளமாகக் கொண்ட பிளாக்ராக் நியூரோடெக் நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் மூளை மற்றும் கணினிக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்த பல சிப்புகளைப் பொருத்தி பரிசோதித்தது.
நியூராலிங்க் இணை நிறுவனரால் உருவாக்கப்பட்ட ப்ரிசிசன் நியூராசைன்ஸ் நிறுவனம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சிப் மூளையின் மேற்பரப்பில் இருக்கும் மிக மெல்லிய டேப்பை போல அமைந்துள்ளது என்பதுடன் "கிரானியல் மைக்ரோ-ஸ்லிட்" மூலம் அது பொருத்தப்படலாம். இது மிகவும் எளிய செயல்முறை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக உள்ள சாதனங்களும் கணிசமான முடிவுகளை உருவாக்கியுள்ளன. சமீபத்திய இரண்டு தனித்தனி அமெரிக்க அறிவியல் ஆய்வுகளில், ஒரு நபர் பேச முயற்சிக்கும் போது மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க இது போன்ற சிப்புகள் பயன்படுத்தப்பட்டன.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூராலிங்க் நிறுவனம் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்டையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் ஒரு குரங்கு வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக எலோன் மஸ்க் அறிவித்தார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாகச் செயல்படும் நியூராலிங்க் எனும் இவரது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன் மூலம் நரம்பியல் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் உதவிகரமான விளைவுக ளைக் கொண்டுவர முடியும் என எலென் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்