மைசூரு-பெங்களூரு-செங்கோட்டை சிறப்பு இரயில். (வழி: இராஜபாளையம்) வண்டி எண்:
06241/06242 அறிமுகம்! இராஜபாளையம் வழியாக முதன்முறையாக பெங்களூரு, மைசூர், சேலம், நாமக்கல், கரூர் மாநகரங்களுக்கு இணைப்புக் கிடைத்துள்ளது. முன்பதிவும் துவங்கியது. பயணிகள் பயன் பெறவும். மைசூரு - காரைக்குடி ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு.மைசூரு - காரைக்குடிக்கு கடந்த வாரம் இரண்டு நாள் சிறப்பு ரயில் (06241) இயக்கப்பட்டது. காரைக்குடி வரை இயக்கப்பட்ட இந்த ரயிலானது தற்போது செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம்.4 ஆம் தேதி புதன்கிழமை மற்றும் 7 ஆம் தேதி சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படுகிறது. மைசூரிலிருந்து இரவு 9:20 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடிக்கு மறுநாள் காலை 11:05 க்கும் செங்கோட்டைக்கு மாலை 4:50 க்கும் சென்றடையும்.
இந்த ரயில், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை செல்லும்.
மறுமார்க்கமாக இந்த ரயில் (எண் :06242) செப்டம்பர் மாதம்-5 ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ( செங்கோட்டையிலிருந்து இரவு : 07.45 மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு 12-15 மணிக்கு காரைக்குடி வந்து, மறுநாள் மதியம் 12:55 மணிக்கு மைசூரு செல்கிறதென தென்னக இரயில்வே மதுரை ரயில்வே கோட்டம் உத்தரவுப் படி தகவல் தெரிவிக்கிறது. இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளதற்கு தொழில் வணிகக் கழகத்தினர் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் இதற்கு முழு வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்