SDRF தகவல் படி , "இன்று, காலையில் ஸ்ரீ கேதார்நாத் ஹெலி பேடில் இருந்து கோச்சார் ஹெலிபேடுக்கு
மற்றொரு உலங்கு வானூர்தி (எ) ஹெலிகாப்டர் மூலம் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பழுதடைந்த நிலையில், தாரு கேம்ப் அருகில் லிஞ்சோலி என்ற இடத்திலுள்ள
ஆற்றில் விழுந்ததாக SDRF மீட்புக் குழுவினருக்கு காவல்துறை அஞ்சல் லிஞ்சோலி மூலம் தகவல் கிடைத்தது. SDRF குழுவினர் சம்பவம் நிகழ்ந்துள்ள இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகாண்ட் எம்ஐ-17 விமானம் மூலம் கௌச்சர் விமான ஓடுதளத்திற்கு பழுதுபார்க்கும் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. மாவட்ட சுற்றுலா அதிகாரி ராகுல் சௌபே கூறுகையில்,
"சனிக்கிழமை ஹெலிகாப்டரை கௌச்சர் விமான ஓடுதளத்திற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது. எம் ஐ 17 விமானம், சிறிது தூரம் சென்றவுடன், ஹெலிகாப்டரின் எடை மற்றும் காற்றின் காரணமாக எம் ஐ -17 சமநிலையை இழக்கத் தொடங்கியது, இதன் காரணமாக ஹெலிகாப்டரை தாரு முகாம் அருகே இறக்கிவிட வேண்டியிருந்தது தகவல் கிடைத்ததும் ஹெலிகாப்டரில் இருந்த சாமான்களை மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கருத்துகள்