ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திருக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்-
கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என ஒருபுறம் முழங்கிவிட்டு, மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்துவது தான் அரசின் சாதனையா ? எனவும்
தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக அச்சடிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலை சுமார் 40 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
390 ரூபாயாக இருந்த ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 550 ரூபாயாக உயர்த்தப்பட்டதில் தொடங்கி, 790 ரூபாயாக இருந்த பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 1,130 ரூபாய் என அனைத்து வகையான பாடப்புத்தகங்களின் விலையையும் திடீரென உயர்த்தியிருப்பது தனியார் பள்ளிகளின் நிர்வாகத்திற்கும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என முதலமைச்சர் ஒருபுறம் முழங்கி வரும் நிலையில், மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களையும் மேலும் மேலும் சிரமத்திற்குள்ளாக்குவது தான் அரசின் சாதனையா ? என மக்களே நேரடியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம், தலைவர் இல்லாமல் இயங்கும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் நடத்தும் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உதவும் பாடப்புத்தகங்களின் விலையையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களில் தொடங்கி அரசுப் பணி கனவில் இரவு, பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் பாடப்புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துவதாக பல கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு பாட நூல் கழக புத்தகங்கள். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டாலும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரு மடங்கு அதிகமாக இந்த வருடம் விற்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாக பேசப்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொடுப்பதால், அந்த இழப்பை தனியார் பள்ளி மாணவர்களிடம் ஈடுகட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இது அநீதியல்லவா? தனியார் பள்ளி மாணவர்கள்உம் தமிழர்கள் தானே? அவர்கள் அனைவரும் பணம் படைத்த குடும்பத்திலிருந்து வந்து விட்டனரா? ஏழை எளிய மக்கள், நடுத்தர குடும்பங்களின் சுமையை குழந்தைகளின் கல்வி செலவில் ஏற்றுவது அராஜகத்தின் உச்சக்கட்டம். எனவும்,
ஒரு சிலருக்கு மின்சாரம் இலவசம், பலருக்கு மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்வு; ஒரு சிலருக்கு பேருந்துகள் இலவசம், பலருக்கு பேருந்துக் கட்டணம் உயர்வு; ஒரு சிலருக்கு ஆவின் மானியம்,பலருக்கு மானியம் ரத்து என்கிற ரீதியில் பிஞ்சுக் குழந்தைகளின் படிப்பில் அரசியல் செய்வது தான் அரசின் நிர்வாகமா? எனவும்,
பாட நூல் கழகத்தில் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் . தமிழ்நாடு அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை மாற வேண்டும் . ஏழை, நடுத்தர மக்களின் உணர்வுகளை மதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். எனவும்மீண்டும் சொல்கிறேன்... கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து!” -
தொடர்ந்து சொல்கிறேன்... தமிழகத்தில் கடந்த 40 வருடங்களாக கல்வித்துறை தான் அரசியல்வாதிகளின் பிரிக்க முடியாத சொத்துக் குவிப்புத் தான் என பாஜக செய்தித் தொடர்பாளரும, மாநில துணைத் தலைவருமான நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
.
கருத்துகள்