இந்தியா உக்ரைன் இரு நாடுகளிடையே தூதரக உறவுகள் எட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது தான்
முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைன் நாட்டிற்குச் செல்கிறார். போலந்தின் இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு ரயில் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். ரஷ்யாவின் அதிபர் புதினை நரேந்திர மோடி சந்தித்துப் பேசியதால் ரஷியாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுகிறதோ என்ற தோற்றம் முதலில் உருவானது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாட்டுத் தலைவர்களின் விமர்சனத்தையும் பெற்றிருந்தது.
இந்த நிலையில், இந்தியா, ரஷ்யாவுக்கு ஆதரவாக இல்லை, நடுநிலையாகவே இருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் வகையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே வருஷத்தில் ரஷ்யாவில் விளாடிமிர் புடினையும், உக்ரைனில் ஜெலென்ஸ்கியையும் கட்டிப்பிடித்த ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான். அதற்குப் பெயர் தான் நடுநிலை அதிகார நிலை. அதற்குப் பெயர் ராஜதந்திரம். கலந்த பொறுப்பு.
கருத்துகள்