திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவரும், அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் கண்ணன், முறைகேடான திட்டத்திற்கு ஒதுக்கிய ரூபாய் 3.5 கோடி மதிப்புள்ள டெண்டரை ரத்து செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உத்தரவு
பிறப்பித்துள்ளார்.ஊராட்சி ஒன்றியத்தின் குழுத் தலைவராக ஆர்.வி.என்.கண்ணன் உள்ளார். இவர் அதிமுகவில் புரட்சித் தலைவி பேரவை என்ற ஜெ.ஜெயலலிதா பேரவையில் மாநில இணைச் செயலாளர் ஆவார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நத்தம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 வார்டு உறுப்பினர்களில் அதிமுக - 15 உறுப்பினர்கள், திமுக - 5 உறுப்பினர்கள் என வென்றதனால் அதிமுக ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்றியது இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் திமுக வில் அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் இணைந்தனர். அதனால் திமுகவின் பலம் 10 ஆக உயர்ந்தது அதிமுகவின் பலம் 15 லிருந்து 10 ஆகக் குறைந்தது. தற்போது சரிசமமாக இரு தரப்பிலும் கவுன்சிலர்கள் உள்ளதால் ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணன் அவரது ஊழல் காரணமாக அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வந்தார். நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் செய்யாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணன் மீது புகார் எழுந்த நிலையில், அந்த டெண்டரை ரத்து செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முறைகேடாக டெண்டர் ஒதுக்கப்படுவதற்கு உடந்தையாகசீ செயல்பட்ட ஊழல் புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட 4 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நத்தம் பகுதியில் கண்ணன் பல ஆண்டுகள் முன்பே நத்தம் விஸ்வநாதன் அதிகாரப் போக்கில் பல விவகாரத்தில் இலஞ்சமின்றி எந்தப் பணியும் அவர் செய்ததில்லை மின்துறை அமைச்சராக விஸ்வநாதன் இருக்கும் காலத்தில் அவரது நடவடிக்கைகள் பலரும் பாதிப்புக்கு உள்ளானது பலரும் அறிந்ததே
கருத்துகள்