விபத்துக் காப்பீட்டுத் தொகையைப் பெற மோசடித் திட்டம்; காவல் துறையினருக்கு அதிர்ச்சிச் சம்பவம்
விபத்துக் காப்பீட்டைப் திரும்பப்பெறுவதற்கான திட்டம் காரணமாக நடந்த குறித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தின் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது
விபத்துக் காப்பீட்டுப் பணத்தைப் பெற ஒரு பெண் திட்டமிட்டு மோசடிச் செயலில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சிக்ககோலிக்கா கிராமத்தில் வசித்து வரும் முனுசாமி கவுடா. மனைவி சில்பா ராணி. ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முனுசாமிக் கவுடா சாலையில் கார் டயர் மாற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் முனுசாமிக் கவுடாவின் உடலைக் கைப்பற்றிய பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் காரினுடைய எண் மற்றும் அவரிடமிருந்த அடையாள அட்டையை வைத்து முனுசாமிக் கவுடாவின் மனைவி சில்பா ராணிக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தார்கள். அங்கு வந்த சில்பா ராணி உயிரிழந்தது என்னுடைய கணவர் தான் என இறந்த உடலை அடையாளம் காட்டியதோடு, பின்னர் சடலத்தையும் வாங்கி இறுதிச் சடங்குகளையும் செய்தார். ஆனால் அதன் பின்னர் பிரேதப் பரிசோதனை செய்த அறிக்கை வெளியாகியது அதில் கண்ட தகவல் காவல் துறையினருக்கு அதிர்ச்சியை உறுவாக்கியது. சம்பவம்
நடந்தது லாரி மோதிய விபத்திலல்ல யாரோ ஒருவர் அடித்ததால் முனுசாமி கவுடாவை கொலை செய்தது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் தேவேந்திர நாயக் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர் அது தொடர்பாகத் தீவிரமாகவே விசாரித்தனர். அப்போது காவல்துறைரயினருக்கே அதிர்ச்சியாகும் வகையில் பல தகவல்களை லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
நடந்தது விபத்தில்லை என ஒப்புக்கொண்ட லாரியின் ஓட்டுநர், இறந்தது முனுசாமி கவுடாவே இல்லை எனத் தெரிவித்தது அவர்கள் அதிர்ச்சிக்குக் காரணமாகியது. காவல் துறையினர் மேலும் நடத்திய தீவிர விசாரணையில் கணவர் முனுசாமி கவுடா பல கோடி ரூபாய் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுப் பாலிசியை வைத்துள்ளார். எனவே அவர் இறந்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் அவரது மனைவி சில்பா ராணி அவரைப் போலவே உருவம் கொண்ட பிச்சைக்காரர் ஒருவரை அடித்துக் கொன்ற பின்னர் அது எனது கணவர் என மோசடி நாடகமாடியது தெரிந்தது.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த லாரி ஓட்டுநர், உண்மையான கணவர் முனுசாமி கவுடா, சில்பா ராணி உள்ளிட்ட 5 நபர்களை இந்த மோசடி வழக்குத் தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள்