பழநி மலை அடிவாரத்தில் பக்தர்களின் வசதிக்காக பலவித நடவடிக்கைகளை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவில் கூறப்பட்டதன் படி, இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிர்வாகம், வருவாய் துறையினர் செய்கின்றனர். மலையைச் சுற்றி அடிவாரத்தில் உள்ள வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
பழநி மலைக் கோவில் வின்ச் ஸ்டேஷன் மேல் தளத்தின் பக்கத்தில் தனியார் 90 ஆண்டுகளாக நடத்தி வரும் உணவகம் இயங்குகிறது. நேற்று அலுவலர்களின் நடவடிக்கைகளின் படி, உணவகத்திலிருந்த பொருட்களைக் கோவில் பணியாளர்கள் வின்ச் மூலம் அடிவாரப் பகுதிக்குக் கொண்டு சென்றனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கடையில் பணி செய்து வந்த ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்