பழிக்கு பழியாக படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினரால் குற்றவாளியாகத் தேடப்படும் ரௌடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்குரைஞர் மொட்டை கிருஷ்ணன், வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடியதாகக் கூறப்படும் நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளநிலையில்,
வழக்குரைஞர் மொட்டை கிருஷ்ணன், செந்திலுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் பேசியதாக பிரபலமான திரைப்பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவியான மோனிஷா வை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ள நிலையில், வழக்கு ஒன்றிற்காக வழக்குரைஞர் மொட்டை கிருஷ்ணன், செந்திலுடன் செல்போனில் பேசியதாக பிரபல இயக்குனரின் மனைவி
காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதையடுத்து பிரபலமான இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவும் வழக்குரைஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார். அடுத்து டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கினார், தற்போது ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தை இயக்கும் பணியிலுள்ளார். இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா இவரது மகன் சிறுவன் ஆத்விக் .
கருத்துகள்