கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவி வகித்த 19-வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் மேயர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய மேயரைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நாளை ஆகஸ்ட் மாதம். 6 ஆம் தேதி நடத்தப்படுமென தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய மேயர் வேட்பாளரை தேர்வு செய்ய மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் என பலரது பெயர் கூறப்பட்ட நிலையில். 100 வார்டுகள் கொண்ட கோயம்புத்தூர் மாநகராட்சியில் 96 இடங்களைத் திமுக வரும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வென்றுள்ள நிலையில்.மேயராக அறிவிக்கப்படுபவர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புகள் இருந்தன. இதற்கிடையே உறுப்பினர்களில் இருந்து ஒருவரை புதிய மேயராகத் தேர்வு செய்ய, திமுக உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இறுதியில் 29-வது வார்டு திமுக கவுன்சிலரான ரங்கநாயகி கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை எனில் இவர் மேயராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்படுவார்
.கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர்கள் உள்ளதில், 73 பேர் தி.மு.க., கவுன்சிலர்கள்; இவர்களில் 33 பேர் பெண்கள். மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், 33 பேரில் ஒருவராக ரங்கநாயகி தேர்வானார், 10 ஆம் வகுப்பு வரை படித்தவர். இவரது கணவர் இராமச்சந்திரன், 29 வது வார்டு தி.மு.க., வட்டச் செயலாளர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சிறையிலிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளரான, 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியின் பெயர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ., ராஜ்குமார் மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டது.
கருத்துகள்