தமிழ்நாட்டின் கல்விக்காக நிதி ஒதுக்குமாறு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மத்திய மனிதவள மேம்பாட்டு மற்றும் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானுக்கு எழுதிய கடிதத்திற்கான பதில்
வந்ததில். தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று பி.எம்.ஶ்ரீ திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டாலே அடுத்த தவணைக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பதிலில் தெரிவித்துள்ளார் மத்தியக் கல்வித் துறையின் அமைச்சர்.
மாணவர் நலனா அல்லது முதல்வரின் கொள்கை ஈகோவா? இதில் எது வெற்றி பெறப்போகின்றது? என்பதே பலரது எதிர்பார்ப்பு பார்ப்போம்.கல்வி மேம்பாட்டுக்கான நிதியை விடுவிப்பதற்கான நிபந்தனையாக PM SHRI திட்டத்தில் கையெழுத்திடுமாறு மாநில அரசுகளை வற்புறுத்திய மத்திய அரசின் நடவடிக்கையை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்!
நமது தனிப்பட்ட தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில், கல்விக் கொள்கை மாநில உரிமைக்கான விழுமியமாகவே இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்தக் கலாச்சாரம் மற்றும் பன்முகத் தன்மை வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் கல்வியின் கட்டமைப்பை மறுவரையறை செய்வது அந்தந்த மாநிலங்களின் உரிமைகளாகவே முன்பிருந்தது.
ஒரு சரியான அரசாங்கமானது மக்கள் தங்கள் கனவுகளை எதிர்நோக்கி முன்னேறுவதற்கான பாலமாக உதவவேண்டும். நாம் எழுச்சியோடு ஒன்றுசேர்ந்து நமது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் சமரசம் இல்லாமல் தங்களுக்கு உரிமையானதை வென்றெடுக்க களம் காணவேண்டும் என நாடாளுமன்ற திமுகவின் தலைவர் கனிமொழி கருணாநிதி கோரிக்கை விடுத்தார்!
கருத்துகள்