இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டிணம் அருகில் ஹீப்ரூ மொழியில் பதிவான கல்வெட்டு கிடைத்த
நிலையில் அதில் உள்ள வார்த்தைகள் ‘நிகி மிய்யா’ எனும் பெண் இறந்த கல்லறையில் வைத்த கல்வெட்டு அதில் செலூசிட் யுகம் (Shvat Seleucid era) 1536-37 என்றும், கிக்ரோபியன் காலண்டர் கிபி 1224-25 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த சில வார்த்தைகள் மற்றும் எழுத்துகள் சிதைந்துள்ளதால் முழுமையான தகவல்களைப் பெற முடியாது. அந்த மொழி அறிந்தவர் தந்த தகவல் படி இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் பெரியபட்டினம் பகுதியில் முன்னர் வாழ்ந்த ஒரு யூதப் பெண்மணியின் கல்லறையில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு என்பது தெரியவந்ததால். உடனே தகவலறிந்த இராமநாதபுரம் தொல்லியல் துறையின் ASI கீழக்கரை வருவாய் வட்டாட்சியருடன் இணைந்து பெரியபட்டினம் அருகில் மரைக்காயர் நகர் பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் நிலத்தின் உரிமையாளர் அனுமதியுடன் அந்த கல்வெட்டு அவர்கள் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அந்தக் கல்வெட்டை பத்திரமாக இராமநாதபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
அந்தக் கல்வெட்டில் இரசாயனம் தடவி சுத்தம் செய்து கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
இந்தக் கல்வெட்டு, பவளப்பாறைகளால் ஆனது. இந்த வகைக் கல் ராமேஸ்வரம் அடுத்த பிசாசுமுனை மற்றும் இலங்கைகா கடல் பகுதிகளில் அதிகளவு இருக்குமென்பதால், அங்கிருந்து கொண்டு வரப்பட்டதாக இருக்கும் என்கின்றனர் தொல்லியல் ஆய்வுகள் தொடர்பில் உள்ள ஆர்வலர்கள்.
கருத்துகள்