தென்னக இரயில்வே மதுரைக் கோட்டம் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பணிப் பொறுப்பேற்பு
மதுரை கோட்டத்தின் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக எல்.என்.ராவ் புதன்கிழமை ஜூலை மாதம் 30 ஆம் தேதி அன்று பணிப் பொறுப்பு ஏற்றார். இவர் 2002 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பொறியியல் பிரிவை சேர்ந்த ரயில்வே அலுவலராவார். இதற்கு முன்பாக மேற்கு ரயில்வே இந்தூர் கட்டுமானப் பிரிவில் துணை முதன்மை பொறியாளராகப் பணியாற்றினார். ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கட்டிட வடிவமைப்பு பிரிவில் முதுநிலைப் பட்டயக் கல்வி பயின்றுள்ளார். புனே கட்டிட மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி தேசிய பயலகத்தில் முதுநிலை நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். இரயில்வே பாலங்கள், குகைகள், ரயில் பாதை மேம்பாலங்கள், புதிய ரயில் பாதைத் திட்டங்கள் மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் சிறந்த அனுபவம் பெற்றவர். கடந்த 33 வருடங்களாக ரயில்வே துறையில் மேற்கு ரயில்வே பகுதியில் உதவி கோட்டப் பொறியாளர், முதுநிலை கோட்டப் பொறியாளர் மற்றும் மும்பை தனி சரக்கு ரயில் பாதை அமைப்பின் துணை திட்ட மேலாளர் போன்ற பணிகளைச் செய்துள்ளார்.
இதுவரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த சி. செல்வம் சென்னைக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.
கருத்துகள்