கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திண்டுக்கல் உணவக உரிமையாளர் சங்கம் மொய் விருந்து நிகழ்ச்சி நடத்தி வசூல் செய்தது.
வயநாடு பகுதியில் நிலச்சரிவு பாதிப்புப் பகுதியில் உயிர்பிழைத்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பல உதவிகள் செய்யப்படுவதில் வசூல் நடந்த வித்தியாசமாக திண்டுக்கல்லில் தனியார் முஜிப் பிரியாணி உணவகத்தில் மொய் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முஜிப் பிரியாணி உணவக உரிமையாளர் முஜிபுர் ரகுமான், வயநாடு மக்களுக்கு தான் மட்டும் உதவினால் போதாதென்று திண்டுக்கல் மக்களுடன் சேர்ந்து உதவவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மொய்விருந்தை நடத்துவதாக அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகம் பரவியதால் அந்த பிரியாணிக் கடைக்கும் விளம்பரம் ஆனது உணவுகளை உண்ட பில் தரப்படமாட்டாது தாங்கள் விரும்பிய தொகையை வழங்கலாம் எனவும்
இதில் வசூலாகும் தொகையை கேரளா மாநிலம் வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் உணவு தயாரிப்புக்கான செலவு இதில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாதெனவும், வசூலாகும் தொகை முழுவதும் நிவாரண நிதியாக மட்டுமே வழங்கப்படும் எனவும் கடை உரிமையாளர் முஜிபுர்ரகுமான் கூறியதையடுத்து திண்டுக்கல் வட்ட வடிவிலுள்ள சாலையில் கடை முன்பு மொய்விருந்தில் ஆர்வமுடன் மக்கள் பங்கேற்கத் திரண்டனர். பலரும் சாப்பிட்ட பிறகு அதற்கு உண்டான தொகையை விட அதிகமான தொகையை இலைக்கு அடியிலும் மற்றும் உண்டியல் மூலமும் வழங்கினர். சிலர் வங்கிக் காசோலையாகவும் வழங்கினர்.
குறைந்த தொகை கொண்டு வந்தவர்கள் உண்டியலில் செலுத்தினர். அதுகுறித்து நிகழ்வு ஏற்பாட்டாளர் முஜிபுர்ரகுமான் பேசுகையில், “வயநாடு மக்களுக்கு நான் ரூபாய்.50 ஆயிரமோ, ஒரு லட்சமோ தனியாக நிவாரணமாகத் தந்து உதவலாம். ஆனால் திண்டுக்கல் மக்களுடன் இணைந்து பங்களிப்பைச் செய்யவேண்டும் எனும் நோக்கில் தான் மக்களால் பட்டுக்கோட்டை பகுதியில் நடக்கும் கந்து வட்டி தொழில் முறை போல நடைபெறும் முறையான மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்.
எனக் கூறாமல் பாரம்பரிய முறை எனக் கூறவே பலரும் இவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என தெரிந்தாலும் இது ஒரு நல்ல நோக்கம் இருப்பதால் இதில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். மொய்விருந்தில் வந்த தொகை அனைத்தும் வயநாடு மக்களுக்கு நிவாரணத் தொகையாகச் சென்றடையும்” என்றார்.
கருத்துகள்