முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடப்பு நாடாளுமன்றக் கூட்ட்டத்தொடரில். வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா.

வக்ஃப் போர்டில் இரண்டு முஸ்லீம்கள் அல்லாதவர்கள் இருக்க வேண்டும். 

அதன் ஆய்வு மற்றும் சர்வே மாவட்ட ஆட்சித் தலைவரால் செய்யப்பட வேண்டும் 

வக்ஃப் வாரிய சொத்தா இல்லையா என்பதை வக்ஃப்  வாரியம் தீர்மானிக்க முடியாது 

சொத்துப் பதிவுகள் மத்திய அரசின் சென்ரல் போர்ட்டில் பதிவு செய்ய வேண்டும்.  நாடாளுமன்ற நடப்புக் கூட்டத்தொடரின் நேரடி அறிவிப்புகள் வருமாறு :- வக்ஃப் மசோதா இன்று அறிமுகப்படுத்தப்பட்டது  இந்த மசோதா வக்ஃப் வாரிய சட்டம், 1995 ஐ, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம், 1995 என மறுபெயரிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.     வக்ஃப் வாரிய மசோதா 



நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வக்ஃப் (திருத்த) மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


ஒரு சொத்து வக்ஃப் வாரிய சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பான தற்போதைய சட்டத்தின் பிரிவு 40 ஐயும் இது தவிர்க்க முயல்கிறது.       இது மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களின் பரந்த அடிப்படையிலான அமைப்பை வழங்குகிறது மற்றும் அத்தகைய அமைப்புகளில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது.


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை மாதம் 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி நிறைவடைகிறது.Waqf Board Amendment Bill ஆனது வக்ஃப் போர்டில் இரண்டு முஸ்லீம் அல்லாதவர்கள் இருக்க வேண்டும் ஆய்வு மற்றும் 



சர்வே மாவட்ட ஆட்சித்தலைவரால் செய்யப்பட வேண்டும் 

வக்ஃப் வாரிய சொத்தா இல்லையா என்பதை வக்ஃப் வாரியமே தீர்மானிக்க முடியாது 

சொத்துப் பதிவுகள் மத்திய அரசின் சென்ரல் போர்ட்டில் பதிய வேண்டும்.  :-நாடு முழுவதிலும் உள்ள வக்ஃப் வாரியங்கள் மீதான சட்டத்தில் 40 வகையான திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதைத் தடுத்து நிறுத்த அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முயற்சிக்கிறது, அதுதொடர்பாக ஆலோசனை நடத்த இணையதளம் வழியான கூட்டத்தை, நேற்று முன்தினம் இரவு, முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் நடத்தியததன் தலைவரான மவுலானா காலீத் சைபுல்லா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற



கூட்டத்தில் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி மற்றும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் முக்கியமான முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்டதில், மத்திய அரசின் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டி பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டனவாம்.

அதன் படி, மத்திய அரசின் சட்டத்திருத்தம் தவறானது என்பதாக விளக்கும் பொருட்டு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிச்சட்ட வாரியம் நேரில் சென்று சந்திக்க உள்ளதாகவும். நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களை தனிச்சட்ட வாரிய நிர்வாகிகள் சந்தித்துப் பேச உள்ளதாகவும்.



பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார், தெலுங்கு தேசத்தின் தலைவர் ஆந்திரப் பிரதே முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஷ்டிரிய லோக் தள கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளனர்.


தமிழ்நாட்டிலும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சந்திக்க உள்ளது. இதற்கான பொறுப்பை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வாரியத்தின் உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான எம்.எச். ஜவாஹிருல்லாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு பிரமுகர் கள் ‘வக்ஃப் வாரியங்களின் மீது மத்திய அரசு கூறும் புகார்களில் உண்மை இல்லை எனவும். வக்ஃப் நிர்வாகிகள், தீர்ப்பாய உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளும் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன எனவும். நிர்வாகிகள் பதவிகளில் பெண்களை நியமிக்க எந்தத் தடையும் கிடையாது எனவும்.  தீர்ப்பாய முடிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்ல சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது எனவும். வக்ஃப் வாரியங்களின் நிலங்கள், மாநில அரசின் வருவாய் துறை நில அளவை ஆணையாளர் தலைமையில் தான் அளவிடப்படுகின்றன.



இந்த அரசு ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் எந்த சர்ச்சைக் குரிய நிலத்தையும் வக்ஃப் வாரியம் கையகப்படுத்த முடியாது எனவும்.

மாறாக வக்ஃப் வாரிய நிலங்கள் தான் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும். அடுத்து வரவிருக்கும் ஜார்க்கண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை  மனதில் கொண்டு இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயல்கிறது’ எனவும் தெரிவித்துள்ளனர்.வக்ஃபு (waqf) என்பதன் பொருள் (அறக்கொடையை) நிலைநாட்டுதல் ஆகும். ஒரு சொத்தை வக்ஃபு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, அதன் வருமானத்தையும், பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதே நோக்கமாகும். வக்ஃப் அளிப்பவரை வாகிஃப் என்பர். இசுலாமிய சமயம் தொடர்பாக பள்ளிவாசல், கல்வி நிலையம் அல்லது தொண்டு நிறுவனம் அமைக்கும் நோக்கத்திற்காக ஒரு முஸ்லீம் இறைவன் பெயரால் வழங்கிய அறக்கொடை ஆகும். ஒருவர் தன்னுடைய சொத்துக்களை வக்ஃபு என்ற அறம் செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வழித்தோன்றல்களோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களாக இருக்க முடியாது.பொதுவாக வக்ஃபு சொத்துக்கள் பொது வக்ஃபு தனி வக்ஃபு, பாதி பொது, தனி வக்ஃபு என மூவகைப்படும். பாலம், கிணறு, சாலை போன்ற அறக்கொடைகள் பொது வக்ஃப் என்பர். வக்ஃபு அளிப்பவரின் குடும்ப நலனுக்கும், உறவினருக்கும் மட்டுமே நன்மை அளிப்பது தனி வக்ஃபு ஆகும். குடும்ப நலனுக்காகப் பாதியும், பொது நலனுக்காகப் பாதியும் அர்ப்பணிக்கப்படும் போது பாதி பொது வக்ஃப், பாதி தனி வக்ஃபு ஆகும். பிரித்தானிய கிழக்கிந்தியாவினர்  ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக வக்ஃபு சொத்துக்கள் தொடர்பாக 1923-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது. 1954-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய அரசு இயற்றிய 1923-ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தை நீக்கி விட்டு, 1954-ஆம் ஆண்டில் புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச்சட்டத்தின் படி ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃபு சொத்துக்களை நிர்வகிக்க மாநில வக்ஃபு வாரியம் போன்று வக்ஃபு வாரியங்கள் நிறுவப்பட்டது. பின் 1995-ஆம் ஆண்டில் புதிய வக்ஃபு சட்டம் இயற்றப்பட்டு, 1954-ஆம் ஆண்டு வக்ஃபு சட்டம் நீக்கப்பட்டது.

இந்திய முசல்மான் வக்ஃப் சட்டம், 1923 சட்டம் 42 ன் நாள் 1923 ஆகஸ்ட் 5, 1923 அன்று வெளியிடப்பட்டுத் தொடங்கப்பட்டது.                          வக்ஃப் வாரியங்கள் இந்தியாவில் 3 வது பெரிய நிலச் சுவான்தார்கள் அல்லது உரிமையாளர்களாக மாறின, இதில் சொத்துக்கள் அவர்கள் மதம் சார்ந்த கடவுளான அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதாக இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்குப் பின்னர் தற்போதும் இருக்கிறது 8 செப்டம்பர், 2022 ஆம் நாள் அமித் கேல்கர் வக்ஃப் வாரியம் டெல்லி

சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கர்நாடக வக்ஃபு வாரியம் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, நிலத்தின் உரிமையைக் கோருமிடத்தில் இந்திய உச்ச நீதிமன்றமும் அனுமதி மறுத்தது . இது மதச்சார்பற்ற நாட்டில் நடைமுறையில் உள்ள வக்ஃப் நடைமுறை மற்றும் அவற்றைப் பராமரிக்கும் நிர்வாக செயல்பாட்டை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ப்ருஹத் பெங்களூரு மஹாநகர பலிகே (பிபிஎம்பி) ஈத்கா நிலம் அரசாங்க நிலமென்றும், எந்த முஸ்லீம் அமைப்புக்கும் உரிமை மாற்றப்படவில்லை என்றும், வக்ஃப் வாரியம் 1850 ஆம் ஆண்டுகளிலிருந்து வக்ஃப் சொத்து என்றும், ஒரு பாரம்பரிய காலத்திலிருந்து இன்றுவரை வக்ஃப் சொத்து எனக் கூறியது. வக்ஃப் வாரியத்தின் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, வக்ஃப் சட்டம் ஒரு மேலெழுந்தவாரியான சட்டமென்றும், அதன் மீது சட்டமியற்றும் அதிகாரங்கள் எதுவுமில்லை என்றும், எனவே வக்ஃப் சொத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாதென்றும் வாதிட்டார்.

அப்போது விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுத்த உச்சநீதிமன்றம், அந்த இடத்தில் உள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவில் கூறியது.

வக்ஃப் என்பதன் நேரடியான பொருள் தடுப்பு அல்லது சிறைப்படுத்தல் மற்றும் தடை. இஸ்லாமிய மதம் சார்ந்த கோட்பாட்டின் படி, அது இஸ்லாமிய மதம் சார்ந்த தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே கிடைக்கும் சொத்து, அந்தச் சொத்துக்களை வேறு நோக்கத்தில் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ தடைசெய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, வக்ஃப் நிறுவப்பட்டு, சொத்து வக்ஃபுக்கு அளிக்கப்பட்டால், அது எப்போதும் வக்ஃப் சொத்தாகும்.

வக்ஃப் என்பது வக்ஃப் செய்பவரிடமிருந்து சொத்தின் உரிமை பறிக்கப்பட்டு, இஸ்லாமிய வழிபாட்டுக் கடவுளான அல்லாஹ்வால் மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளஷரியாவின் படி, இந்த ச்சொத்து இப்போது நிரந்தரமாக அந்தக் கடவுள் அல்லாஹ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இயற்கையில் வக்ஃப் மாற்ற முடியாததாகிறது.

 வக்ஃப் சொத்துக்கள் கடவுள் அல்லாஹ்வுக்கு வழங்கப்படுவதாகக் கருதப்படுவதால், உடல் ரீதியாக உறுதியான நிறுவனம் இல்லாத நிலையில், வக்ஃபு நிர்வகிப்பதற்கு வாக்கிஃப் அல்லது 'முடவல்லி' நியமிக்கப்படுகிறார். 

இந்தியாவில், வக்ஃப் வரலாற்றை டெல்லி சுல்தான் முய்சுதீன் சம் கோர் முல்தானின் ஜமா மஸ்ஜித்திற்கு ஆதரவாக இரண்டு கிராமங்களை அர்ப்பணித்து அதன் நிர்வாகத்தை ஷைகுல் இஸ்லாமிடம் ஒப்படைத்தார். இந்தியாவில் டெல்லி சுல்தானகமும் பின்னர் இஸ்லாமிய வம்சங்களும் ஆப்கானிஸ்தான் தைமூர் காலம் துவங்கி ஔரங்கசீப் காலம் வரை அதன் பின்னர் மாலிக் காபூர் 1310 ஆம் ஆண்டு மற்றும் திப்பு சுல்தான் 1790 ஆம் ஆண்டு படையெடுப்பும் அதன் பின்னர் சுதந்திர காலம் வரை டில்லி சுல்தான்கள் மற்றும் சுதந்திர இந்தியாவில் இணைய மறுத்து ராணுவ நடவடிக்கை மூலம் இணைப்பு செய்த ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆர்காடு நவாப் உள்ளிட்ட பலர் செழித்தோங்கியதால், இந்தியாவில் வக்ஃப் சொத்துக்களின் எண்ணிக்கை


திப்பு சுல்தான் காலம் தொட்டு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் வக்ஃப்களை ஒழிக்க ஒரு வழக்கு நடந்தது, அது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியின் காலத்தில் லண்டன் பிரிவ்யூ கவுன்சிலில் வக்ஃப் சொத்து தொடர்பான சர்ச்சை முடிவானது. வழக்கை விசாரித்த நான்கு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் ஆட்சியில் நீதிபதிகள் வக்ஃப் "மோசமான மற்றும் மிகவும் தீங்கு விளைவிக்கும் வகையின் நிரந்தரம்" என்று விவரித்தனர் மற்றும் வக்ஃப் செல்லாது என்றும் அறிவித்தனர். இந்த நான்கு நீதிபதிகளின் முடிவு இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, 1913 ஆம் ஆண்டின் இஸ்லாமிய வக்ஃப் நிர்வாகம் சரிபார்க்கும் சட்டம் இந்தியாவில் வக்ஃப் நிறுவனத்தைக் காப்பாற்றியதன்பிறகு, வக்ஃப்களைக் கட்டுப்படுத்த எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை, மேலும் ஆயுதப்படை மற்றும் இந்திய இரயில்வேக்கு அடுத்து வக்ஃப் வாரியத்தில் தான் இந்தியாவில் 3 வது பெரிய நில உரிமையாளராகும்.

உண்மையில், அரசியல் வாக்கு வங்கிகள் வக்ஃப் அமைப்பு இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தான் பலப்படுத்தப்பட்டது என்று ஆணையிட்டுள்ளது. அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட 1954 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் வக்ஃப்களை மையப்படுத்துவதற்கான பாதையை அமைத்து. மத்திய வக்ஃப் கவுன்சில் ஆஃப் இந்தியா, 1954 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தால் 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த மத்திய அமைப்பு வக்ஃப் பிரிவு 9 (1) விதிகளின் கீழ் நிறுவப்பட்ட பல்வேறு மாநில வக்ஃப் வாரியங்களின் கீழ் பணிகளை மேற்பார்வையிடுகிறது. சட்டம், 1954. வக்ஃப் சட்டம் 1995 ல் முஸ்லீம்களுக்கு இன்னும் சாதகமானதாக மாற்றப்பட்டது, இது வழக்கறிஞர் டேவ் சுட்டிக் காட்டியது போல், ஒரு மேலாதிக்கச் சட்டம் மற்றும் அதன் மீது சட்டமியற்றும் அதிகாரங்கள் இல்லை. வக்ஃப் சட்டம், 1995 நவம்பர் 22, 1995 ல் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் மற்றும் முத்தவல்லியின் கடமைகளையும் குறிப்பிடுகிறது.வக்ஃப் வாரியம்  இந்தியாவில் 940,000 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட 900,000 சொத்துக்களைக் கட்டுப்படுத்துவதன் மதிப்பு ரூபாய் 1.2 லட்சம் கோடி,  இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளராகும்

சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் குறிப்பின் படி, திருத்தங்கள் 2006 ஆம் ஆண்டு ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை மற்றும் 2008 ஆம் ஆண்டு கூட்டு நாடாளுமன்றக் குழு அறிக்கை இரண்டின் பரிந்துரைகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளில் முத்தவல்லி (வக்ஃப் காப்பாளர்), நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வக்ஃப் நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாத தொழில்நுட்ப வல்லுனர்களை ஈடுபடுத்துதல் ஆகியவை அடங்கும். இது CWC மற்றும் ஒவ்வொரு SWB க்கும் இரண்டு பெண் உறுப்பினர்களைச் சேர்ப்பது, ஒரு இணைச் செயலாளர் நிலை அதிகாரியை நியமித்தல் மற்றும் வக்ஃப் சொத்துக்களுக்கான நிதி தணிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றை முன்மொழிகிறது.

இந்தச் இஸ்லாமியச் சட்டமானது வக்ஃப் தீர்ப்பாயத்தின் அதிகாரம் மற்றும் கட்டுப்பாடுகளை மட்டுமே விவரிக்கிறது, அது அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு பதிலாகவே செயல்படுகிறது. வக்ஃப் தீர்ப்பாயங்கள் ஒரு சிவில் நீதிமன்றமாகக் கருதப்பட்டு, 1908 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சிவில் நீதிமன்றத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் செயல்படுத்த வேண்டும். தீர்ப்பாயத்தின் முடிவு இறுதியானது மற்றும் கட்சிகளைக் கட்டுப்படுத்தும். எந்தவொரு சிவில் நீதிமன்றத்தின் கீழும் எந்தவொரு வழக்கும் அல்லது சட்ட நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது, இந்தச் சட்டம் ஒரு தீர்ப்பாயத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும். எனவே, எந்தவொரு சிவில் நீதிமன்றத்திற்கும் மேலாக வக்ஃப் தீர்ப்பாயம் முடிவுகளை எடுக்கிறது. அதனால் தான் தற்போது இந்த சட்டம் ஒழுங்கு படுத்தும் நோக்கில் திருத்தச் சட்டம் மூலம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.            இதில் பொது நீதி யாதெனில்:


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் சமஸ்தானத்தின் மன்னர்கள் மானியம் ஒழித்தார், அதில் தான் இந்து சாம்ராஜ்யம் சரிந்தது, அதுபோல நில உச்சவரம்பு ச சட்டம் கொண்டு வந்த போது பாதிக்கப்பட்ட நபர்கள் எல்லாம் இந்துக்களில் உள்ள தர்மகர்த்தாக்கள், மற்றும் ஆலய புணரமைப்பு செய்து புண்ணிய ஆத்மாக்கள் ஆனால் அப்போது வாய்மூடி மௌனியாக வாய் திறக்கவில்லை இந்த கம்யூனிஸ சித்தாந்திகள் அனைவரும் ஆனால் இப்போது இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரும்போது மட்டும் குய்யோ முறையோ எனக் குதிப்பது பார்க்க வேடிக்கை தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...