முதல்வர் மு.க. அமெரிக்கா செல்லும் நிலையில் நேற்று மதியம்,
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அறிஞர் சி.என்.அண்ணாதுரை, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று, மலர் துாவி மரியாதை
செலுத்திய நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.மூத்த அரசியல்வாதிகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு துரைமுருகன் சமீபத்தில் அளித்த பதில் தான் அரசியல் காரணமாகிறது
ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, திமுகவின் வயது மூத்த அரசியல்வாதிகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.
மறைந்த திமுக தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி குறித்து அமைச்சர் ஏ.வா.வேலு எழுதிய புத்தகத்தை சனிக்கிழமையன்று வெளியிடும் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தலைவர்களுக்கு நேரடியாக தெரிவித்த கருத்து பழைய திமுகவினருக்கு சில சங்கடங்களையும் ஏற்படுத்தியது.
திமுகவை பழைய மாணவர்களின் வகுப்பறைக்கு இணையாக ஒப்பிட்டவர், ஒரு ஆசிரியர் புதிய மாணவர்களின் வகுப்பறையைக் கையாள முடியும், ஆனால் பழைய மாணவர்களைக் கையாள்வது எப்போதும் கடினமாக இருக்கும்
திமுகவில் பழைய மாணவர்கள் அதிகம். தேர்வில் ரேங்க் பெற்ற பிறகும் வகுப்பறையை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள். அவர்களை சமாளிப்பது எளிதல்ல. கலைஞரின் [கருணாநிதி] வாழ்க்கையைக் கூட கஷ்டப்படுத்தக்கூடிய திரு.துரைமுருகன் இருக்கிறார். ஸ்டாலின் சார் உங்களுக்கு வாழ்த்துகள்” என மேடையில் இருந்த மற்றும் கீழ் இருந்த பார்வையாளர்களின் சிரிப்பொலிக்கு மத்தியில் அவர் பேசினார்.
அதுகுறித்து வேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கேட்ட வினாவிற்கு, ஆமைச்சர் க.துரைமுருகன் தனது வழக்கமான நகைச்சுவையில் பதிலளித்தவர். “வாழ்வியல் இறுதிக் கட்டத்தில் பல் விழுந்து, விளையாட்டுத் தாடியுடன் வயதாகி விட்ட நடிகர்கள், இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு மறுக்கும் வகையில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். என நாம் அப்படிச் சொல்வது எவ்வளவு எளிது.
தலைவர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு கட்சி அமைப்பை ஒன்றிணைக்க பல தலைவர்கள் போராடிய நிலையில், திரு. மு.க.ஸ்டாலின் அந்தப் பணியை திறமையாகச் செய்தார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க..ஸ்டாலின், நடிகரின் தாராளமான வார்த்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்ததோடு, அவரது ஆலோசனையைப் பின்பற்றுவதாக ஒப்புக்கொண்டார். “கவலைப்படத் தேவையில்லை. நான் கவனமாக இருப்பேன், எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன்,'' என்றார். நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்று அங்கு அரசியல் பேசிய நிலையில் இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் இது ரஜினிகாந்த் தானாகவே பேசியதாகக் தெரியவில்லை எனவும் விமானங்கள் வந்தன, அதனால் அவமானப்பட்ட நடிகர் ரஜினி காந்த் அமைச்சர் துரைமுருகனின் கருத்து
'மூத்த நடிகர்கள், பல் விழுந்து சாகிற நிலையில் இருக்கிறவன் எல்லாம் கதாநாயகனாக நடிப்பதால், இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை,'' எனக் கூறியதால்.
அதன் பிண்ணனி தற்போது பலராலும் அரசியல் ஆக்கப்பட்ட நிலையில்
ரஜினிகாந்த் திமுக கட்சியில் ஒரு சுனாமியை உருவாக்கி இருக்கிறார் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்கொள்கை கோட்பாடு எதுவுமில்லாத பக்கா சந்தர்ப்பவாதி .. அவ்வளவு தான் ..மேன்மக்கள் என்ற வார்த்தை விரயம் ரஜினி சந்தர்ப்பவாதின்னா அவரை சிறப்பு விருந்தினராய் அழைத்தவர்களும் சந்தர்ப்பவாதிகள்தான்.
மத்தளத்திற்கு ஒரு பக்கத்தை மட்டும் விமர்சிப்பீர்களா?
இருகை ஓசை வந்த பிறகு ஒரு கையை மட்டும் விமர்சிப்பீர்களா?எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன் எனத் துரைமுருகன் Vs ரஜினிகாந்த் விவகாரம் பார்க்கப்படும் நிலையில்
வார்த்தை மோதலுக்கு தற்போது இருவரும் முற்றுப்புள்ளி! வைத்தனர், நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். எங்கள் நட்புத் தொடரும்’ துரைமுருகனை எனக்கு ரொம்ப பிடிக்கும்; அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது - என்று தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த் அம்பானி வீட்டுத் திருமண நிகழ்வில் ஆட்டம் போட்டவர் யார் எழுதிய வசனமும் பேசி நடிக்கும் ஒரு நடிகர். திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்களை நேரில் சாடிப் பேசியாதையும் அதற்கு துரைமுருகன் பல்லுப் போன நடிகர்கள் என்று பேசியதையும் மட்டும் பார்த்து விட்டு அரசியல் அறிந்தவர்களால்கடந்து போக முடியாது !
நாம் காண வேண்டியது அறிஞர் அண்ணா உள்ளிட்ட ஐம்பெரும் குடும்பங்களில் திமுகவின் தற்போது முதல் குடும்பமாக உள்ள டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி குடும்பம் இதை எப்படி எடுத்து கொண்டது என்று - நேற்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிக மிகத் தெளிவாகச் சொல்லுவதை ! - கட்சிகாரகளும் கவணிக்கத் தவறவில்லை.
அது கூட சரி ஆனால் உதயநிதி துணை முதல்வராக வரப்போகும் நிலையில், . அதற்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் தானாக விலகிக்கொள்வது நல்லது. என்பதாக ரஜினி வாய்ஸ் மூலமாக இதை தலைமை அறிவித்து இருக்கிறது என்ற பார்வையே தற்போது நிலவுகிறது.
துரைமுருகனை ரஜினி கேலி செய்ததை திமுகவின் ஆதரவு தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு திரும்பத் திரும்ப ஓளிபரப்பியது. கிண்டலான தலைப்புகள் வேறு. இதுக்கு என்ன அர்த்தம்என பலரும் பேச,
ரஜினிகாந்த் பேசியதை திமுக தலைமை ரசித்தது. தாங்கள் சொல்லவேண்டியதைத்தான் ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார்,என்பதை அவர்கள் சிரிப்பே காட்டிவிட்டது. அந்த அரங்கில் மிக அதிகக் கைதட்டல்களை பெற்ற விஷயமிது தான். இதை அமைச்சர் உதயநிதியே இன்று சொல்லியிருக்கிறார்.
இந்த விஷயம் குறித்து. .முதலமைச்சர் சொல்லியே ரஜினி பேசியுள்ளார் - என அதிமுகவில் கே.பி.முனுசாமி கூறியதில் ரஜினியை வைத்து திமுகவில் உள்ள சீனியர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவமதிக்கிறார் என்ற குற்றச்சாட்டு கூறியுள்ளது பரபரப்பாகியுள்ளது. கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி புத்தகம் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், முதல்வரை புகழ்ந்து பேசி உள்ளதோடு திமுகவில் உள்ள சீனியர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது தந்தையின் ஆட்சியில் பல்வேறு பதவிகள் வகித்து அதன் பிறகு தான் முதல்வராக உள்ளார். ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்து பொதுச்செயலாளர் ஆகியுள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் இதெல்லாம் ரஜினிக்கு தெரியாது என்றும் முதல்வரை புகழ வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் தான்தோன்றித்தனமாக பேசியுள்ளார் என்றும் தெரிவித்தார்.
திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாத தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரஜினிகாந்த்தை அழைத்துப் பேசவிட்டு சீனியர்களை அவமானப்படுத்தி இருப்பதாக எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றும் திமுகவுக்காக நீண்ட காலம் உழைத்த துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெளியேற வேண்டும் என்று ரஜினியை வைத்து முதல்வர் அவமானப்படுத்தி உள்ளார் என்றும் இதுபோன்று இரண்டாம் கட்டத் தலைவர்களை அதிமுக ஒருபோதும் அவமதித்தது இல்லை என்றும் அவர் கூறினார்.
கருத்துகள்