கட்சித் தாவலுக்கு ஒரு கவிதைக் கடிதம் எழுதி விட்டு விலகினார்,
பீஹார் மாநிலத்தின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவின் முன்னாள் சிஷ்யர் ஷியாம் ரஜாக். அவர் எழுதிய ராஜினாமா கடிதம்:- "நான் சதுரங்கத்தை சிறப்பாக விளையாடியதில்லை; அதனால் தான் ஏமாற்றப்பட்டேன். நான் உறவை பேணிக் கொண்டிருந்தேன்; நீங்கள் காய்களை நகர்த்துகிறீர்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இராஜினாமா கடிதம். பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஷியாம் ரஜாக் அக் கட்சியின் தலைமைக்கு எழுதிய கடிதம். கட்சியின் பட்டியல் ஜாதியினரின் முகமாக அறியப்பட்ட ஷியாம் ரஜக், ஒரு காலத்தில் லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமான சிஷ்யராக இருந்தார். வாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவியின் அமைச்சரவையில் அமைச்சராகவுமிருந்தார்.அவருக்கு கடந்த தேர்தலில் போட்டியிட தேஜஸ்வி தொகுதி ஒதுக்கீடு வழங்க மறுத்து விட்டார். அதிருப்தியிலிருந்த ரஜாக், இப்போது கவிதையாக ஒரு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.அவர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைய உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. ரஜாக், புல்வாரி தொகுதியில் செல்வாக்கு மிக்கவர். கடந்த ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நிதீஷ் குமார் கட்சியிலும் சட்டமன்ற உறுப்பினராவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். லாலு பிரசாத் யாதவ் செயல்பாடிழந்து, அவரது மகன் தேஜஸ்வி தலைமையில் கட்சி செயல்படும் நிலையில், ரஜாக்கின் செல்வாக்கு கட்சியில் கேள்விக்குறியாக உள்ளது. வருத்தத்திலிருந்தவர், கட்சி மாற காலம் பார்த்து முடிவெடுத்து விட்டார் என்கின்றனர், விவரம் தெரிந்தவர்கள். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சில துரோகம் செய்யப்பட்டதனால் அதிருப்தியடைந்து கட்சியிலிருந்து விலகினேன். அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறார். எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்