முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான நட்வர் சிங் காலமானார்.
இந்திய அயலகப்பணி அதிகாரியாகவும் பின் அரசியலில் மத்திய அமைச்சர். இலங்கைத் தமிழர்கள் சிக்கல் நிறைந்த நேரத்தில் வெளியுறவுத்துறை யின் அமைச்சர் நட்வர்சிங் ,(வயது 93) காலமானார் . அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இராஜஸ்தான் மாநிலத்தவர் டில்லி அருகில் குருகிராமில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக சிகிச்சையிலிருந்தார். 2004 ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத் துறையில் அமைச்சராகப் பணியாற்றினார். 'One Life is Not Enough ' ஆகிய பல நூல்களையும் எழுதியுள்ளார். பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர் முதலில் காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவராக அறியப்பட்ட நட்வர்சிங் அதே காங்கிரஸ் கட்சியின் 'முதல் குடும்பமான' சோனியா காந்திக்கு எதிரான கலகத்திலும் முக்கியப் பங்கு வகித்தார். இலங்கைப் பிரச்சனையில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறை, சோனியா காந்தி குடும்பத்தின் ரகசியங்களை வெளியிடுதல் என காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொந்தரவாக இருந்தவர் காங்கிரஸின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான நட்வர்சிங். 1966 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் பிரதமர் அலுவலகப் பணியில் இணைந்தார், அவரது குடும்பத்து நெருங்கிய நபரானவர் நட்வர்சிங். 1984 ஆம் ஆண்டு வெளியுறவுத் துறைச் செயலாளராகவும் பணியாற்றிய நட்வர்சிங் அந்தப் பணியை ராஜினாமா செய்தார். 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த. பின்னர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சரானார். 1985-க்குப் பின் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் நட்வர்சிங் உருவெடுத்தார். பின்னர் காங்கிரஸிலிருந்தும் விலகினார்.1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் கை ஓங்கிய பின்னரே மீண்டும் அந்தக் கட்சியில் இணைந்தார் நட்வர்சிங். நாடாளுமன்ற மக்களவையில் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்தவர், 2004 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியின் போது வெளியுறவுத் துறை அமைச்சரானார். 2005 ஆம் ஆண்டு ஈராக்குக்கு உணவு, மருந்துக்கு எண்ணெய் என்ற ஐக்கிய நாடுகளின் திட்டத்தில் நடந்த ஊழலில் சிக்கி அமைச்சர் பதவியைப் பறி கொடுத்தார் நட்வர்சிங். 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நட்வர்சிங் நீக்கப்பட்ட நிலையில் 2008-ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியிலிணைந்தார். அக்கட்சியிலும் இருந்து நட்வர்சிங் நீக்கப்பட்டார். அதையடுத்து ராஜீவ் காந்தி-சோனியா குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன் பல சோனியா குடும்பத்து இரகசியங்களையும் பகிரங்கப்படுத்திப் பெரும் குடைச்சல் கொடுத்தவராவார்.
கருத்துகள்