சொந்தத் தாய் நாட்டின் ஆதரவில்லை.
விளையாட்டுத்துறைகளில் கார்ப்பொரேட்டுகளின் ஆதிக்கம் புகுந்து விட்டது.
அரசியல் முதல் விளையாட்டுப் போட்டிகள் வரை யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முன்னரே தீர்மானிப்பது தான் இதுவும் சூதாட்டமே .
கிரிக்கெட் முதல் எல்லா போட்டிகளிலும் கார்ப்பொரேட்களின் தலையீட்டு அரசியல்.
திரைப்படத்துறைகளிலும் கார்ப்பொரேட் மாபியாக்களின் கொள்கைத் திணிப்புகள்.
இதனால், எந்த போட்டிகளிலும் உண்மைத்தன்மை இல்லாத நிலையில், இவர்களை ரசிக்கும் மக்களே முட்டாள்களாக்கப்படுகின்றனர்.
தற்போது வினேஷ் போகத் தகுதி நீக்கம் மீதான அரசியல் குறித்த கேள்விகள் பல நியாயமானது.
பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டுமென் வலியுறுத்தியுள்ளார் அதன் விபரம் பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் செவ்வாய்க்கிழமை களமிறங்கிய இந்திய விளையாட்டு நட்சத்திரம் வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்திருந்தார். தகுதி சோதனையில் நிர்ணயித்த 50 கிலோ எடையை விட 100 கிராம் எடை அளவு அதிகமிருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாட்டில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்று போட்டிகளின் போதும் முன்னும் பின்னும் எடை சரியாக இருந்திருக்கிறது. ஆனால் அன்று மட்டும் 100 கிராம் எடை கூடியிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. பயிற்சியாளர் குறித்தும் இந்தப் போட்டியில் அவர் சந்தேகம் எழுப்பி இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியிலுள்ள அரசியல் என்ன என்பது குறித்து மக்கள் கேட்கும் கேள்விகளும் நியாயமானதே. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்..
ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களால் ஒரே இரவில் 5-6 கிலோ வரை எடையைக்குறைக்க முடியும், 100 கிராம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பசி, தூக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது எப்படி என தங்களுக்குத் தெரியும். இந்தியா விளையாட்டில் சாதிப்பதைப் பிடிக்காதவர்கள் செய்த சதியாக இதைப் பார்ப்பதாகச் சொல்லியிருப்பதை எளிதில் புறந்தள்ளி விட முடியாது.
வினேஷ் போகத்தின் கடந்த கால அரசியல் போராட்டங்களை மனதில் கொண்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்று மக்கள் பேசுவதற்குப் பதில் அளிக்கும் வகையில்
இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் நெறியாளர்கள், பயிற்சியாளர்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற திறமைசாலிகள் ஒருக்காலும் புறக்கணிக்கப்படக் கூடாது. வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவற விட்டிருந்தாலும் மக்களின் மனங்களை வென்றிருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை எனவும் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் உலக மல்யுத்தக் கூட்டமைப்புடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பேசினார். விதிகளில் சற்று தளர்வு தருமாறு கேட்டும். வினேஷ் மீது தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் சிறப்பாக விளையாடினார். அவரது பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களே இதற்கு முழு பொறுப்பாளர்கள். வினேஷ் போகாட்டின் உடல் எடை எவ்வாறு அதிகரித்து என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். வினேஷ் போகாட்டின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என சஞ்சய் சிங் தெரிவித்தார்.
100 கிராம் என்பது 100 மில்லி தண்ணீர். அதாவது அரை டம்ளர் தண்ணீர்.
ஒலிம்பிக் போட்டிகளில் உடல் எடையை அடிக்கடி சோதனை செய்து கொண்டேயிருப்பார்கள். போட்டியாளரின் உடல் எடையைக் கண்காணித்து அவருக்கான உணவை எடைபார்த்து அளிக்க வேண்டியது அவருடைய பயிற்சியாளரின் கடமை. இந்த உடல் எடையை 350 கிராம் வரையில் எளிதில் குறைக்கவோ கூட்டவோ முடியும். முதல் நாள் இரவு உணவு காலை உணவு குடிநீர் ஆகியவற்றை சரிசெய்து அளிப்பதன் மூலம் பயிற்சியாளர் போட்டியாளரின் உடல் எடையை சரியாக பார்வை செலுத்த முடியும். எவ்வளவு பணம் அளிக்கப்பட்டதோ..விலை போய்விட்டார்களா. விலைக்கு வாங்குவது பலருக்கும் கைவந்த கலை .
ஒரே ஒரு ஆறுதல். போதை மருந்தையோ ஸ்டீராய்டையோ உணவில் கலந்து அளித்து அவரை ஒரு கிரிமினல் குற்றவாளியாக ஆக்காமல் விட்டார்களே.. !
அந்த தங்க மங்கை விரும்பினால் அவரை அள்ளி எடுத்து அரவணைத்து குடியுரிமை அளிக்க நாடுகள் காத்துக்கிடக்கின்றன. அழிப்பவர்கள் யாராக இருக்கும் மக்களுக்கு நினைவுக்கு வருக்கிறதா? முகேஷ் அம்பானி அனிடா ஆனந்த் அம்பானி தானே ஒலிம்பிக் குழுவின் சர்வதேச உறுப்பினர் .வெறும் 100 கிராம் அல்ல, இரண்டு கிலோ 100 கிராம் .
50 கிலோ எடை பிரிவில் அதிகம் இரண்டு கிலோ வரை அனுமதி அதற்கு மேல் இடமில்லை.
இது முழுமையாக விஷயம் அறியாமல் ஊடக விஷமம் அதன் வன்மம்
ஆனால் சாதனையாளர்களுக்கு இது சோதனை கலந்த விளையாட்டு
கருத்துகள்