பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உயர் கல்விக்கு இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்கள் நவம்பர் வரை படிக்க உள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பிலுள்ள அண்ணாமலை மூன்று மாதம் அரசியலில் இடைவெளி விட்டதால் , தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளைக் கவனிக்க பாரதிய ஜனதா கட்சியின் தலைமை 6 நபர்கள் கமிட்டியை நியமித்தது.
அதன் தலைவராக H.ராஜா வும் மற்றும் M.சக்கரவர்த்தி , P.கனகசபாபதி, M.முருகானந்தம், ராம சீனிவாசன், S.R.சேகர் ஆகியோர் கமிட்டியின் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கட்சி சார்பான முக்கிய முடிவுகளை இந்த 3 மாத காலத்திற்கு இந்தக் கமிட்டி கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளை மண்டல வாரியாகப் பிரித்து செயலாற்றுவார்கள் என்றும், ஒவ்வொரு நபருக்கும் 1 அல்லது 2 மண்டலங்கள் ஒதுக்கப்படுமென்றும் யாருக்கு எந்த மண்டலம் என குழுத் தலைவர் H.ராஜா முடிவு செய்வார் என கட்சித் தலைமைத் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.
கருத்துகள்