வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியை ராஜினாமா செய்யவில்லையென அவரது மகன் தகவல்
இராஜினாமா செய்து இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்பட்ட வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியை ராஜினாமா செய்யவில்லையென அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.
அரசாங்க வேலைகளுக்கான சர்ச்சைக்குரிய ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக பல வாரங்களாக வன்முறை நடந்து.
மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து இறுதியில், வங்காள தேச ராணுவம் 45 நிமிடங்கள் கெடு விதித்ததால் அவர் இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடக்கும் என தான் நம்புவதாககா கூறிய அவர், அடுத்த தேர்தலில் அம்மாவின் கட்சியான அவாமி லீக் பங்கேற்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், ஷேக் ஹசீனா விரைவில் நாடு திரும்புவார் என்றும் அவர் அரசியல் புகலிடம் எதுவும் கோரவில்லை என்றும் கூறிய சஜீப், ஹசீனாவிற்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில்
வங்காள தேச தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்தார் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் குழு தலைவர்கள், நீதித்துறை புதிய ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தில் ஈடுபடலாம் என்ற அச்சத்தின் காரணமாக டாக்காவிலுள்ள உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டனர்
புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசை கலந்தாலோசிக்காமல், தலைமை நீதிபதியால் முழு நீதிமன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் இந்த எதிர்ப்புக் கிளம்பிய சூழ்நிலையில் நீதிமன்றம் எவ்வாறு செயல்படுவது மற்றும் பிற சிக்கல்கள் குறித்து அவர்கள் முடிவு செய்யவிருந்த கூட்டத்தை போராட்டம் காரணமாக ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் அறிவித்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டிய நிலை
சட்ட ஆலோசகர் பேராசிரியர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையிலும், மாணவர்களின் கோரிக்கைகளை மதிக்கும் வகையிலும் தலைமை நீதிபதி தனது முடிவை தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் 2023 ஆம் ஆண்டு பதவியில் நியமிக்கப்பட்டதால், இவர் ஷேக் ஹசீனாவின் விசுவாசி என்று கருதும் போராட்டக்காரர்கள், அவர் புதிதாக அமைந்துள்ள ஆட்சியை கலைக்க சட்டரீதியாக முயற்சிக்கலாம் என அஞ்சுவது இங்கு குறிப்பிடத்தக்கது.மேலும் வங்காள தேசத்தின் சிறைகளிலிருந்து தப்பிய 1,200 கைதிகள் இந்தியாவில் நுழைய வாய்ப்புள்ளது என்பதால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். வங்காள தேச வன்முறையின்போது, அங்குள்ள 5 சிறைகளிலிருந்த கைதிகளை போராட்டக்காரர்கள் வெளியேற்றினர்.
நர்சிங்கி சிறையிலிருந்து தப்பியவர்களில் 400 கைதிகள் மட்டும் சரணடைந்துள்ளனர். ஜமாத்-இ-இஸ்லாமி, ஹெபாசத்-இ-இஸ்லாம் அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் சரணைடையவில்லை. இவர்களில் பலர் தாங்கள் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை விற்க இந்தியாவுக்குள் நுழையலாமென எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்திய எல்லைகளில் குவியும் வங்கதேசத்தின் ஹிந்துக்கள் வங்காள தேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதில் 560 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டோ அல்லது செய்யாமலோ இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
மாணவர்கள் போராட்டம் ஓய்ந்தாலும் வங்கதேசம் முழுவதும் ஹிந்துக்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 17,000 ஹிந்துக் குடும்பங்கள் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையைக் கொண்டுள்ளது. மேற்கு வங்காளம், திரிபுரா,அசாம், மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்கள் வங்காளதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளன. இந்த 5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வங்காள தேச ஹிந்துக்கள் குவிந்து வருகின்றனர்.
அதுகுறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) பகுதியிலிருந்து வரும் தகவல் தெரிவிப்பதாவது: மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி, வங்காளதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 50 மீட்டர் தொலைவு இடைவெளியில் பிஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை சுமார் 500-க்கும் மேற்பட்ட வங்காள தேச மக்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாகவும்,மேகாலயா மாநிலம் வங்காள தேசத்துடன் 443 கி.மீ. தொலைவு எல்லைக்குட்பட்டது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் தடுப்பு வேலியில்லை. வழக்கமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வங்காள தேச மக்கள் நாள்தோறும் மேகாலயாவுக்கு வந்து விட்டுத் திரும்பிச் செல்வது அன்றாட வழக்கம். தற்போது வங்காள தேச மக்களின் வருகை முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலம் வங்கதேசத்துடன் 273 கி.மீ. தொலைவு எல்லையைக் கொண்டுள்ளது இது மலைப்பகுதி என்பதால் ஊடுருவலை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் திரிபுரா மாநிலம், வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் 8 சோதனைச் சாவடிகளும் உள்ளன. இந்த சோதனைச் சாவடிகள் வழியாக நாள் தோறும் நூற்றுக்கணக்கான வங்காள தேச மக்கள் இந்தியாவுக்குள் நுழைவது வழக்கம். தற்போது வங்காள தேச மக்களின் வருகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அசாமிலிருந்து வங்காள தேசத்துக்கு பாரக் நதியின் வழியாக நாள்தோறும் மாடுகள் கடத்தப்படுவதும் வழக்கம். தற்போது பிஎஸ்எப் வீரர்களின் பலத்த பாதுகாப்பு காரணமாக மாடுகள் கடத்தல் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.
அசாதாரண சூழல் காரணமாக மேற்கு வங்காளம் , திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வங்கதேச இந்துக்கள் தற்போது குவிந்து வருகின்றனர். அவர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறி திருப்பி அனுப்பி வருகிறது இவ்வாறு எல்லைப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வட்டாரங்கள்,
திரிபுரா மூத்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சௌரவ் காந்தி தாஸ் தெரிவித்துள்ளதாவது:- வங்காள தேச ஹிந்துக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதுதொடர்பாக பிஎஸ்எப் படையின் கிழக்கு பிராந்திய கூடுதல் இயக்குநர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.
வங்காள தேசத்தில் 32 சதவீதமான ஹிந்துக்களின் மக்கள் தொகை தற்போது 8 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது வங்காள தேச ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும். எனத் தெரிவித்தார்.
கருத்துகள்