மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்.
மேற்கு வங்காள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக் குறைவால் காலமானார்.
கொல்கத்தாவிலுள்ள அவரது வீட்டில் காலை 8.20 மணியளவில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மீரா எனும் மனைவியும், சுசேதனா எனும் மகளும் உள்ளார்கள். அவரது மறைவுக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். கடந்தாண்டு உடல்நலக் குறைவு பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருந்ததால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின் வீடு திரும்பினார்.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். தற்போது வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்மேற்கு வங்கிக் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
கருத்துகள்