இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரிக்கு சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) தலைமை இயக்குநா் (டி.ஜி.) தல்ஜித் சிங் செளதரிக்கு எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநராக கூடுதல் பொறுப்பு
முன்னாள் பிஎஸ்எஃப் டி.ஜி. நிதின் அகா்வால் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து நியமனம் செய்யப்பட்டுள்ளது.
தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிட்ட உத்தரவில், ‘1990-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியும் எஸ்எஸ்பி டி.ஜி.யுமான தல்ஜித் சிங் செளதரிக்கு பிஎஸ்எஃப் டி.ஜி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. புதிய பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் நியமிக்கப்படும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பிஎஸ்எஃப் டி.ஜி.யாக அவா் பதவி வகிப்பாா்’ எனக் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி, பூஞ்ச், ரியாசி, உத்தம்பூா், கதுவா மற்றும் தோடா ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட 22 போ் உயிரிழந்த நிலையில், பிஎஸ்எஃப் டி.ஜி.யாக 2023 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற கேரளா மாநில பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரி நிதின் அகா்வால் மற்றும் ஒடிஸா மாநில பிரிவைச் சோ்ந்த சிறப்பு டி.ஜி. குரானியா ஆகியோா் அவா்களது பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநிலப் பணிகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்கு எல்லை மற்றும் கிழக்கு எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் பிஎஸ்எஃப் படையைச் சோ்ந்த வீரா்களும், நேபாளம் மற்றும் பூடானுடனான இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் சஷஸ்திர சீமா பல் படையைச் சோ்ந்த வீரா்களும் ஈடுபடுகின்றனா்.
கருத்துகள்