சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் புழுதிபட்டி காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட முசுண்டபட்டியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட மின் மோட்டார் அறையில் மதுவோ சாரயமோ குடிக்க வந்த குடிகாரர்கள் இருவரை இங்கு மது அருந்தக்கூடாது என்ற கூட்டுக் குடி நீர்த் திட்ட ஆபரேட்டர் தங்கராஜ் என்பவரை கழுத்தில் குத்தி கொலை செய்தனர்.
இது நாள் வரை மது அருந்தி விட்டு போதையில் கொலை செய்த நபர்களால் சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், மது அருந்துவதைத் தடுத்ததற்காக கொலை நடந்துள்ளது சமுதாயச் சீர்கேட்டின் உச்சத்தில் தமிழ்நாடு உள்ளதை இது உணர்த்துகிறது. வன்முறையில் ஈடுபட மக்களிடம் தயக்கமில்லாத சூழ்நிலை இன்று நிலவுவதைகா காண முடிகிறது. மக்களின் பொறுப்பற்ற தன்மை, சட்டம் ஒழுங்கின் மீதான அரசின் ஊழல் மற்றும் அலட்சியம், திரைப்படங்களில் இடம் பெறும் வன்முறைகள், சமூக ஊடகங்களின் தாக்கமென ஒட்டு மொத்த சமுதாய அமைப்பும் அலட்சியத்தை, அராஜகத்தை, சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையை விதைத்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளான அரசு, காவல்துறை, நீதித்துறை ஆகிய அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
கருத்துகள்