முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியோ மேக்ஸ் மோசடி சொத்துக்கள் ED யால் முடங்கியது நீதிமன்றம் 15 மாத கால அவகாசம் தற்கொலைகளைத் தடுக்குமா

ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், முதலில் அவருடைய ஆசையைத் தூண்ட வேண்டும்’ எனும் வசனம் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும்.


அதனடிப்படையிலேயே முற்றிலும் வினோதமான இந்த நியோ மேக்ஸ் மோசடிகளைப் போல திரையில் பார்க்கும்போது, ​​நீங்கள் நன்றாகச் சிரிக்கிறீர்கள், மற்றும் சிந்திக்கிறீர்கள் ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் நம் நாட்டில் அன்றாட நிகழ்வுகள் என்பதை அடுத்த நொடியிலேயே வசதியாக மறந்தும் விடுகின்றனர். திரைப்படக் கதாநாயகன் சரியாகச் சுட்டிக்காட்டுவது போல,

மனிதனின் அடிப்படையான பேராசை உணர்வுக்கு தடை இல்லாத நிலையில் பணம் சம்பாதிப்பது மிகவும் இந்தத் திருடர்களுக்கு எளிமையானதாக இருக்கும் என்று விசாரணை செய்யாமல் முதலீடு செய்து நம்புகிற மக்கள் தான் அவர்கள் பலம் இவர்கள் பலஹீனம் தற்போது ஏமாற்றம் நிகழ்ந்த பின்னர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதோ ஏமாற்றப்பட்ட பலரது சோகக் கதை :- சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி எம்.ஜி.ஆா் நகர் இராமலிங்கம் (வயது 54). இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். நியோ மேக்ஸ் நிறுவனத்தில் ரூபாய். 25 லட்சத்தை இராமலிங்கம் முதலீடு செய்தாா்.




அந்த நபர்கள் நடத்திய மணி லாண்டரி மோசடி அதாவது ஒரே நிலத்தை பலருக்கும் விற்பனை செய்து லாபம் பார்ப்பது மூலம் அதை வாங்கும் நபர்களுக்கு பதிவு செய்து தருவதில்லை இருந்தும் பணத்தின் ஆசை காரணமாக முதலீடு செயத இவரது நண்பா்கள்,உறவினா்கள் பலரையும் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ய வைத்த நிலையில், அந்த நில நிதி நிறுவனம் நியோமேக்ஸ் இராமலிங்கத்துக்கு  இராமம் போட்டது, வட்டி, முதலீடு செய்த பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியது. மேலும், பணம் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த உறவினா்கள் இராமலிங்கத்துக்கு நெருக்கடி கொடுத்தனா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.



இதுகுறித்து திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா், தற்கொலை செய்து கொண்ட இராமலிங்கம் அந்த ஊர் இடுகாட்டில் பிரேதம் பரிசோதனைக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டார். ஆம் அவரை நம்பி நியோமேக்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களும்  இராமலிங்கம் போல அடங்கிவிட்டார்களா என்பது தான் இந்த மோசடிக் கும்பலின் இராஜ தந்திரம்.

அதேபோல் நியோமேக்ஸ் நிறுவனங்களில்`முதலீடு செய்த மற்றொரு நபர் பணத்தையாவது கொடுங்கள்'' என கெஞ்சிக் கேட்டும் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார் பேராவூரணி பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி இந்த நில நிதி முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நிலையில் அந்த நிறுவனம் பணத்தை திருப்பி தராததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.   நியோமேக்ஸ் மோசடி வழக்கில் விசாரணையை முடிக்க மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு 15 மாதங்கள் அவகாசமளித்துள்ளது நீதிமன்றம்



நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கின் விசாரணையை 15 மாதங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு ( EOW ) சென்னை உயர் நீதிமன்றத்தின். நீதிபதி எம்.தண்டபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சொத்துக்களை இணைப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்குவதற்கான தொடர் உத்தரவுகளையும் வழங்கினார்.

விசாரணை நடத்திய நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, விசாரணையின் மந்தமான மற்றும் மெதுவான வேகத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்று நீதிமன்றம் கவலையாகக் கவனித்தது.

3.6 லட்சம் முதலீட்டாளர்களுக்கு 11,179 முதலீட்டாளர்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டதென்று நீதிபதி கூறினார். 10,000 கோடிக்கும் அதிகமான தொகையில் சுமார் ரூபாய்.851 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே ED மூலம் முடக்கப்பட்டுள்ளன. டிஎன்பிஐடி நீதிமன்றம் மற்றும் டிஆர்ஓக்கள் மூலம் டெபாசிட் செய்பவர்களுக்கு சுமார் ரூபாய்.150 கோடி மட்டுமே சில உயர் சிபாரிசு இருந்த நிலையில் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.


நீதியரசர் எம்.தண்டபாணி கூறுகையில், ஒவ்வொரு தனிநபரும் தனது ஆரம்ப நாட்களில் பணப் பலன்களைப் பெறுவதற்கு கடுமையாகப் பாடுபடுகிறார், அதை அவர் முதலீடு

செய்கிறார், அதன்மூலம் வாழ்க்கையின் பிற்பகுதியில், அது அவரது முதுமைக் காலத்தில்  உதவியாக இருக்கும். எவ்வாறாயினும், ஏமாற்றி மிதக்கும் நிதி நிறுவனங்களால் இத்தகைய டெபாசிட்டுகள் நேர்மையற்ற கூறுகளால் பறிக்கப்படுகின்றன, அவை லாபகரமான மற்றும் கற்பனையான வட்டியை வழங்குகின்றன, இருப்பினும் அவை சாதாரண மக்களுக்கு வைப்புத் தொகையை எப்போதாவது திருப்பிச் செலுத்துகின்றன. சாதாரண மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மீட்டெடுக்க துவக்க நிலையிலிருந்து ஓட வைக்கப்படுகிறான்.

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் விசாரணையை முடிக்க EOW க்கு 15 மாதங்கள் அவகாசமுள்ளது

நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்பவர்களின் நலன்களைப் பாதுகாக்க தமிழ்நாடு டெபாசிட்டர்களின் வட்டி பாதுகாப்புச் சட்டம் (டிஎன்பிஐடி) இயற்றப்பட்டது என்ற நிலையில்  ரிசர்வ் வங்கி போன்ற ஒழுங்கு முறை அதிகாரிகளின் வரம்பிற்குள் வராத நிதி நிறுவனங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்யும் வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். சட்டத்தை இயற்றியதன் நோக்கத்தை அடைவதற்காக, வைப்புத்தொகையாளர்களுக்கு எதிராக நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடிச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.




இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவு, கூறப்பட்ட வசூலில் இருந்து வாங்கப்பட்ட நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள் போன்றவர்களின் சொத்துக்களை அனைத்தையும் பறிமுதல் செய்ய அரசுக்கு உதவுகிறது.



எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் டெபாசிட் செய்த தொகையை அனைத்து டெபாசிட்தாரர்களின் விவரங்களையும் வெளியிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார்.



சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள TNPID வழக்குகளின் பொருளான சொத்துக்கள் எதையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்நியப்படுத்தக் கூடாது.நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள நிலையில்,

ரூபாய்.21.80 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு புகார் அடிப்படையில் தகவல்!  நில நிதி மோசடி வழக்கில் திரைபடத் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் என்பவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டார்! நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடிப் பணத்தில் அவர் தயாரித்த திரைப்படம் அதை இயக்கிய தங்கர்பச்சான்.



குறித்து நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்த போது“நியோ மேக்ஸ்”நிதி நிறுவன உரிமையாளர் செய்த மோசடி பணத்தில் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் தயாரிப்பாளர் துரை.வீர சக்தி என்பதும் தெரியவந்தது. மக்கள் பணம் ரூபாய் 5000 கோடியைச் சுருட்டி கொள்ளை.அடித்தநிலையில்..இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களுக்கும் பங்கு உண்டு. ரூபாய் 500கோடி. 10 பேர் இந்த கொள்ளயில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த உடந்தைக் குற்றவாளிகளை காப்பாற்ற. பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ரூபாய் 5000 கோடி மக்கள் பணமில்லையா. ஒரு கட்சி மாநிலத் தலைவர் அரசியல் செலவு மாதம் ரூபாய் 8 லட்சம் செய்வது  இப்படித் தானா என்று மக்கள் கேட்கும் நிலையில். .  


மேலும், நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் நிலம் வாங்குவதற்காக கணிசமான அளவு பொது நிதியை பிற நிறுவனங்களுக்கு (குழுவிற்கு வெளியே) மாற்றியிருப்பதும், இந்த அசையாச் சொத்துக்கள் இன்னும் அந்த நிறுவனங்களிடம் இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த நிலப் குவிப்பு பார்சல்கள் மற்றும் திட்டங்கள் நியோமேக்ஸ் குழும நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 'குற்றச் செயல்கள்' என்பதும் விசாரணையில் தெரியவந்தது.   

சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள TNPID வழக்குகளின் பொருளான எந்தச் சொத்தையும் அந்நியப்படுத்தக் கூடாது என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இணைக்கப்பட்ட ஒரு தொகுதியை தள்ளுபடி செய்யும் போது நீதிமன்றம் இந்த உத்தரவுகளை வழங்கியது.


இவர்களுக்கு கம்பெனிகள் சட்டத்தின் படி பதிவு அதன்CIN: U70109TN2013PTC093705 நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் ROC குறியீடு ரோசி-சென்னை பதிவு எண் 093705 நிறுவனத்தின் வகை பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுவனம் நிறுவனத்தின் துணைப்பிரிவு அரசு சாரா நிறுவனத்தின் தனியார் பாதுகாப்பு தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூபாய் 40000000

செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் 14020000

உறுப்பினர்களின் எண்ணிக்கை (பங்கு மூலதனம் இல்லாத நிறுவனத்தில் பொருந்தும்) இணைக்கப்பட்ட தேதி 14-11-2013

பதிவு செய்யப்பட்ட முகவரி ரிக்கி டவர் - இரண்டாம் தளம் எண் -85, சுப்ரமணிய பிள்ளை தெரு, காலனி, பைபாஸ் ரோடு மதுரை 625016 மின்னஞ்சல் ID: neomaxpropertiespvtltd@gmail.com

பட்டியலிடப்படாதது பங்குச் சந்தையில் நிறுத்தப்பட்டது -

கடைசி AGM தேதி 30-11-2021

இருப்பு நிலைக் குறிப்பின் தேதி 31-03-2021

நிறுவனத்தின் நிலை (எப்ஃபைலிங் செய்ய) 16-11-2022            இயக்குநர்கள்

DIN/PAN. பெயர் தொடக்க தேதி

02615451 சங்கரபாண்டி பாலசுப்ரமணியன் 10-05-2018

02677775 சண்முகம் கமலக்கண்ணன் 10-05-2018

05169785 துரைக்கண்ணு வீரசக்தி    14-11-2013 ஆகியோர் ஆவர். 



இதில் எத்தனை தீர்வு வந்தாலும் பொது நீதி யாதெனில் :-  ஒரு ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஐந்து ரூபாய் வீதம் ஐந்து நபருக்கு 25 ரூபாய்க்கு விற்பதாக கூறி பதிவு செய்யாமல் பத்திரம் வழங்கி 24 ரூபாய் லாபம் பார்த்து அதில் பத்து சதவீதம் தரகர் கமிஷன் வழங்கி மீதம் அவர்கள் வசம் நிலமும் அவர்கள் வசம் பணம் முதலீடு செய்த பலரும் பதிவு செய்யாமல் வாங்கிய முதலீட்டு பத்திரம் இது தான் செபி அனுமதி பெறாத மணி லாண்டரி எனும் பணச்சூதாட்டம் இதற்கு முறையாக ரிசர்வ் வங்கி அனுமதி மற்றும் அரசு அனுமதி பெறவேண்டும் ஆனால் இவர்கள் பெறவில்லை



இதை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் விசாரிக்கவில்லை அதனால் இனி இதில் இப்போது விசாரணை நடத்தி வரும் ஏஜன்சியான மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு அதைத் தாண்டி அமலாக்கத்துறை முடக்கிய சொத்து


செஃபி கட்டுப்பாட்டுக்குச் செல்லும் அது முதலீட்டாளர்களுக்கு ஒரு கமிஷன் நியமிக்கும் அப்போது தான் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் பாதித் தீர்வு வரும். இவர்கள் பண முதலீடு மக்கள் மூலம் பெற ரிசர்வ் வங்கி அனுமதி பெறவில்லை என்பதே உண்மை. இதில் பொருளாதார குற்றப்பிரிவு பலமுறை அழைத்தும் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுக்காமல் இருப்பவர்கள்


பல இலட்சம் பணத்தை முதலீடு செய்து வருமான வரி செலுத்தாமல் இருக்கும் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் அல்லது லஞ்சம் ஊழல் செய்து வந்த பணத்தை லாப நோக்கில் முதலீடு செய்த அரசு ஊழியர்கள் மற்றும் தொழில் முதலீட்டு நபர்கள் ஆகவே இவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் உள்ளதால் தான் புகார்கள் எண்ணிக்கை குறைகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...