காவல்துறையில் வருண் குமார் IPS அவர்களின் செயல்பாட்டை நேர்மையான பலரும் விரும்புகின்றனர்
நாம் தமிழர் கட்சியின் மாணவனால் தானும் தனது குடும்பத்தாரும் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அந்த மாணவனைத் தண்டிக்கக்கூடிய குற்றம் செய்த போதும், அனைத்து பலமும், அதிகாரமும் தன்னிடமிருந்தாலும், அந்த மாணவனின் படிப்பையும் அவன் எதிர்காலத்தையும் கருதி அவனையும் அவனது பெற்றோரையும் அழைத்துப் புத்திமதி கூறி அனுப்பி வைத்தது உண்மையிலேயே அவரை நன்றாக அறிந்தவர்களன்றி அறியாத பலரும் பாராட்டுகின்றனர்.
உண்மையிலேயே அண்ணன் என்று அழைக்கக்கூடிய முழுத் தகுதியும் இந்த இடத்தில் வருண் குமார் IPS க்கே பொருந்தும்.
ஏதோ சீமான் ஒருவர் தான் இந்த தமிழர்களைக் காப்பாற்ற வந்த நபர் போல பேசுவதை அவரது கட்சியினர் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால் அரணையூர் சைமன் என்ற சீமான் யார் ? அவரது பின்புலம் என்ன? என்பது அறிந்தவர்கள் அவரது பேச்சை ரசிப்பதில்லை ! அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதுமில்லை! உண்மை வெளியில புலியாகப் பேசும் சீமான் அது அவருக்கு ஒரு கவசம் அல்லது தந்திரம் தன்னை நம்புகின்றவர்களுக்கு ஒரு கட்சியின் தலைவன் நல்வழி காட்டும் நிலையில் இருக்க வேண்டும், எதையெல்லாம் பொதுவெளியில் பேசவேண்டும் என்பதை விட, எதையெல்லாம் பேசக்கூடாது எனபதைத் தெரிந்திருக்க வேண்டும். அது சுத்தமாக சீமானிடம் இல்லை. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், உரப்புளி ஊராட்சியில் பிறந்த காவல்துறை பணியில் சிறந்து விளங்கும்
தமிழ்நாடு ஐபிஎஸ் உயர் அலுவலர் வருண் குமார், மற்றும் அவரது மனைவி ஆன்லைன் முறைகேடு புகார்களுக்கு மத்தியில் சமூக ஊடகங்களில் இருந்து விலகி, நடவடிக்கை எடுப்பதாக சபதம் செய்து அவரும் அவரது மனைவியும் சமூக ஊடகங்களில் இருந்து 'தற்காலிகமாக' ஓய்வு எடுப்பதாக வருண் குமார் ஐபிஎஸ் அறிவித்தார், ஆனால் ஆன்லைன் துஷ்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
ஐபிஎஸ் உயர் அலுவலர் வி.வருண் குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக உள்ளார். வருண் குமார் ஐபிஎஸ் திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையராக உள்ளார், தனது குடும்பத்தினர் மீதான ஆன்லைன் முறைகேட்டுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக சனிக்கிழமை எக்ஸ் தளத்தில் உறுதியளித்தார். மேலும், ஆன்லைன் முறைகேடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் கொடுத்ததாகவும், பின்னர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 3 பேர் மீது திருச்சிராப்பள்ளி சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்ததாகவும் வருண் குமார் ஐபிஎஸ் தனது X பதிவில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களால் சமூக ஊடக தளங்களில் தனது குடும்ப உறுப்பினர்கள் குறிவைக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் ஐபிஎஸ் உயர் அலுவலர் குற்றம் சாட்டினார்.
X தளத்தில் அவர் பகிர்ந்து கொண்ட 8 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், அருண்குமார் ஐபிஎஸ் தனது அவதூறு வழக்கைத் தொடர்ந்து, தனது குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டை அவர் சந்தேகிப்பதாகவும் கூறினார்.
கட்சியுடன் தொடர்புடையதாக அவர் கருதும் 51 X கணக்குகளைப் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடும் போலிக் கணக்குகளை, குறிப்பிட்ட கட்சியின் அமைப்பாளர்கள், மாநில அளவிலான தலைவர்கள் முதல் மாவட்ட அளவிலான தலைவர்கள் வரை, முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலுடன் இயக்கி வருகின்றனர்.
மேலும், வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் பேசும் நபர்களுக்கு பணம் செலுத்தி ஆபாசமான தகவல்களை வெளியிட பல போலி கணக்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவரும், புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரு மான வந்திதா பாண்டேவும், இந்தத் தலைப்பில் உரையாடலில் ஈடுபடுவதில் இருந்து தற்காலிக ஓய்வு எடுப்பதாக வருண் குமார் ஐபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்மீது 138 வழக்குகள் இருப்பதாகச் சொல்கிறார் ஆனால் அவரது தேர்தல் வேட்புமனுவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த போது 17 வழக்குகள் மட்டுமே உள்ளதாகப் பொய்யான தகவலை அளித்துள்ளார்.
இதற்காகவே தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குத் தொடரவேண்டும் என்பது நடுநிலை மக்கள் கருத்தாகும். இரண்டு வாரங்களாக திருச்சிராப்பள்ளி மாநகர் காவலதுறைக் ஆணையர் வருண் குமார், ஐபிஎஸ் க்கும் நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் நீடித்தது. அதாவது காலம்சென்ற முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்ற நபர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் குறித்து அவதூறு மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஓருங்கிணைப்பாளார் அரணையூர் சீமான் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பேசுகையில் திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் மீது தகாத வார்த்தைகள் மற்றும் மிரட்டும் விதத்தில் பேசியதாகவும் அதே போல அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரும் வருண்குமார் ஐபிஎஸ் குறித்து அவதூறான கருத்துக்களைப் பரப்பியதாக கூறப்படுகிறது, அதனால் திருச்சிராப்பள்ளி தில்லை நகர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு நபரை அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்கள் பதிவிடுவது, தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சைமன் என்ற சீமான் அக்கட்சியைச் சேர்ந்த சாட்டை அடைமொழி கொண்ட துரைமுருகன், இடும்பாவனம் ஊரைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சிராப்பள்ளி மாநகர் தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே சமூக வலைதளங்களில் திருச்சிராப்பள்ளி காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் மற்றும் திருப்பதி ஆகிய இருவரை தில்லைநகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் திருச்சிராப்பள்ளி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 16 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிண் உறவினர்களும் காவலர்கள் அவர்களை 10 நிமிடத்தில் அனுப்பிவிடுவதாகக் கூறித்தான் கைது செய்தனர், அதன்பின் அவர்கள் இருவரும் எங்கே சென்றார்கள் என்ற் தெரியவில்லை நாங்களாக அவர்களைத் தேடி இங்கு வந்தோம் என்றும் காவலர்கள் அவர்களை அடித்ததில் பலத்த காயம் ஏற்ப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ் தான் காரணம் எனவும், அவருக்கு சாதி ரீதியான வெறுப்பு இருக்கிறது எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதனால் கொதிப்படைந்த இதுவரை நடுநிலை தவறாத நேர்மையான காவல்துறை ஆணையர் வருண்குமார் ஐபிஎஸ், தனது வழக்கறிஞர் மூலமாக அரணையூர் சைமன் என்ற சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினார் சீமானுக்கு எதிராக வருண் குமார் ஐபிஎஸ் அளித்த நோட்டீஸில், தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக ஏழு நாட்களுக்குள் சீமான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும், தவறும் பட்சத்தில் 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகத் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்த நிலையில் பின்னர் 16 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சீமான் தனது வழக்கறிஞர் மூலமாக சமர்ப்பித்துள்ளார்.வருண் குமாருக்கு டிஜிபி ஆகுற தகுதியே இருக்கு என திடீரென பல்டி அடித்த சீமான் - அவதூறு நோட்டீஸுக்கு விரிவாக பதில் அளித்துள்ளார். , “திருச்சிராப்பள்ளி மாநகர் காவல்துறை ஆணையர் வருண் குமாரின் ஜாதி என்னவென்றே எனக்குத் தெரியாது. சாட்டை துரைமுருகனிடம் வருண் குமாரின் ஜாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நான் பேசிவிட்டேன். இளம் அதிகாரியான வருண் குமாருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பதவி உயர்வுகள் மூலம் டிஜிபி ஆகும் அளவுக்கு தகுதியுள்ளது. அவதூறு கருத்துகள் பதிவிட்ட விவகாரத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் காவல் துறை மற்றும் காவலர்கள் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் கொண்டவன். 8 மணி நேரம் வேலை உள்பட காவல் துறையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளேன்” என்று பல்டி அடித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் பொது நீதி யாதெனில்:- "அரசியல் பிழைத்தோர்கு அறம் கூற்றாகும்"
கருத்துகள்