வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும். புதிய வரி விதிப்பின் கீழ் ஆண்டு வருமானம் ரூபாய். 3 லட்சத்துக்கும் குறைவாகவும், பழைய வரி முறையின் கீழ் ரூபாய். 2.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் நிறுவனம் உங்கள் சம்பளத்தில் இருந்து TDS பிடித்தம் செய்திருந்தால், உங்கள் சம்பளம் IT சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை விலக்கு வரம்புகளை விட அதிகமாக உள்ளது என்று அர்த்தம். எனவே வருமான வரி தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரி அறிவிப்பு உங்களுக்கு அனுப்பப்படலாம்.
வருமான வரிச் சட்டம், 1961, பிரிவுகள் 139(9), 143(1), 143(2), 143(3), 245, 144, 147, மற்றும் 144, 147 உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யத் தவறிய நபர்கள் நோட்டீஸ்களைப் பெறலாம்.
வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்புவதற்கான பொதுவான காரணங்கள்.
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாதது: உங்கள் சம்பளத்தில் TDS பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், ITR தாக்கல் செய்ய வேண்டும். காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்தால், வருமானக் கணக்கீடு மற்றும் முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். காலக்கெடு கடந்த பின், வருமானக் கணக்கீடு மற்றும் முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பித்து வரி ஏய்ப்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். மெயில் மூலம் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாததற்கானஅறிவிப்பைப் பெற்றால், வருமான வரி இ-ஃபைலிங் இணையதளத்தில் உள்நுழைந்து ஆன்லைனில் பதிலளிக்கலாம். "Compliance section" என்ற பிரிவிற்குச் சென்று, உங்கள் அறிவிப்பைக் கண்டறிந்து, போர்ட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள தாக்கல் செய்யாததற்கான காரணங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
கருத்துகள்