முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடிகை காதம்பரி ஜேத்வானிக்கு தொந்தரவு செய்த 3 மூத்த ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிடை நீக்கம்

நடிகை காதம்பரி ஜேத்வானிக்கு தொந்தரவு செய்த 3 மூத்த ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கடந்த ஆட்சிக்காலத்தில் தான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறாவிட்டால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என காவல்துறை அலுவலர்கள் தன்னை மிரட்டியதாக நடிகை காதாம்பரி ஜெத்வானி குற்றம் சாட்டினார். மஹாராஷ்டிரா மாநிலத்தின்  மும்பையைச் சேர்ந்த நடிகரும், மாடலுமான காதம்பரி ஜெத்வானியை முறையான விசாரணை நடத்தாமல், தவறான முறையில் கைது செய்து துன்புறுத்தியதாகக் கூறி, ஒரு டைரக்டர் ஜெனரல் (டிஜி) உள்ளிட்ட மூன்று மூத்த இந்தியக் காவல்துறை (ஐபிஎஸ்) அலுவலர்களை ஆந்திரப் பிரதேச மாநில அரசு  பணியிடை நீக்கம் செய்துள்ளது. எனத் தெரிவித்தனர். முன்னாள் உளவுத்துறையின் தலைவர் பி. சீதாராம ஆஞ்சநேயுலு (டிஜி ரேங்க்), விஜயவாடா காவல்துறை ஆணையர் கிராந்தி ராணா டாடா (இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரேங்க்), மற்றும் முன்னாள் துணை துணைக் காவல் ஆணையர் விஷால் குன்னி (கண்காணிப்பாளர் ரேங்க்) ஆகியோரின் பங்கு பற்றிய விசாரணையைத் தொடர்ந்து மேற்கண்ட அலுவலர்கள் பணியிடைநீக்கத்தை எதிர்கொண்டனர். குறிப்பிடத்தக்க மக்கள் கவனத்தை ஈர்த்த அந்த வழக்கு.ஆகஸ்ட்

சீனப் பூண்டு பயன்பாடு ஆபத்து அதிகம்

சீன நாட்டில்  பூண்டு விளைவிக்க அதிகமாக இரசாயன உரங்களைப் பயன்படுத்தப்படுத்துவதனால் அங்கு பூண்டு மிக வேகமாக  உற்பத்தியாகிறது. இதன் காரணமாக தான் பூண்டு விளைச்சலில் உலகளவில் முதன்மை நாடாக சீனா விளங்குகிறது. அதிகப்படியான இரசாயன உரங்களின் உதவியில் விளைவிக்கப்படும் பூண்டு நம்முடைய உடலுக்கு தீங்கானது. அதனால் நாட்டு மக்களின் நலன் கருதி சீன நாட்டில் உற்பத்தி ஆகும் பூண்டுக்கு  2014 ஆம் ஆண்டு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் கூட எப்படியோ கள்ளச்சந்தையில் சீனா பூண்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் சீன நாட்டு பூண்டின் விலை மிகவும் குறைவு. அதனை இந்தியாவில் விற்பனை செய்யும் போது அதிக லாபம் கிடைப்பதனால் தொடர்ந்து சீனா பூண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நம் நாட்டில் பூண்டு அதிகம் ஏற்றுமதி ஆவதால் உள்நாட்டு தட்டுப்பாடு அந்த வகையில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது  சீனாவிலிருந்து கண்டெய்னர்கள் மூலம் குஜராத் மாநிலத்துக்கு சீனா பூண்டு வந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டி

நடிகை ரோகிணி புகாரில் முன்னாள் அமைச்சர் தம்பி மீது வழக்குப் பதிவு

காலஞ்சென்ற நடிகர் ரகுவரன் மனைவி நடிகை ரோகினி அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் க.ராஜாராமின் சகோதரர் யூடியூபர் டாக்டர் க.கந்தராஜ் மீது சென்னை நகரின் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்  -தமிழ்த் திரைப்படத் தொழிலில் உள்ள பல நடிகைகள் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டதாக யூடியூப் சேனலில் பேட்டியளித்ததற்காக, வர்ணனையாளரான காந்தராஜ் மீது சென்னை நகர காவல்துறையின் பூஜியம் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.  நடிகை ரோகிணி சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.அருணிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நடிகை ரோகினி தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தின் (SIAA) பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் குழுவின் (ICC) தலைவராவார். கடந்த வெள்ளிக்கிழமை 13 செப்டம்பர் 2024 ஆம் தேதி அவர் அளித்த புகாரில்,  டாக்டர் க.காந்தராஜ் ஆபாசமான வார்த்தைகளால் பெண்களை இழிவுபடுத்திய தாகவும் அவர் அளித்த பேட்டியில் திரைப்படத் துறையிலுள்ள பெண்களை மோசமானவர்களாக அவரது யூடியூப் பேட்டிகள் மூலம் காட்டியதாகக் கூறியவர், டாக்டர் க.காந்தராஜ் மீது கிரிமினல் புகாரைப் பதிவு செய்வதும், அந்த யூடியூப் காணொ

நிபந்தனை முன்ஜாமீன் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்து போட்ட பொன் மாணிக்கவேல்

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் நான்கு வார காலத்துக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஓய்வுபெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் கையெழுத்திட்டார்.    திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோவிலில்  2005-ஆம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் களவு போனதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டி  கிராமத்தில் 2008-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட நிலையில் அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக பணியிலிருந்த காதர் பாஷா அதைக் கைப்பறிய நிலையில், இந்தச் சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு காதர் பாஷா விற்பனை செய்துவிட்டதாக 2017-ஆம் ஆண்டு, அப்போது சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக பணியிலிருந்த பொன்.மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்து காதர் பாஷாவை கைது செய்து சிறையிலடைத்தார். அப்போது காதர் பாஷா திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த காதர் பாஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக

நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் 'ரொபாக்கோ'வின் சொத்துக்களை முடக்க அரசாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜனங்கள் பணத்தை ஏமாற்றி நில  மோசடி வழக்கில் சிக்கிய நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் 'ரொபாக்கோ'வின் சொத்துக்களை முடக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நடராஜன் தாக்கல் செய்த வழக்கில் ரொபாக்கோ பிராப்பர்ட்டீஸ் நிறுவன முதலீட்டாளர்கள் நலச் சங்க தலைவராக உள்ளதால் மதுரையில் பாலசுப்பிரமணியன் என்பவர் நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் துவக்கினார். அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி, குறைந்த விலையில் வீட்டு மனைகள் (பிளாட்கள்) கிடைக்குமென நிறுவனம் அறிவிப்பு செய்தது. நிறுவனம் நம்பிக்கையானது நம்ப வைக்கும் வகையில் முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் வீட்டு மனைகள் துவக்கத்தில் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 250 நிதி நிறுவனங்களை பாலசுப்பிரமணியன் துவக்கினார். அந்த நிறுவனங்கள் சிலவற்றின் இயக்குனர்கள் சார்லஸ், இளையராஜா. ஆகியோரால் சிவகங்கை மாவட்டத்தில் ரொபாக்கோ நிறுவனம் துவக்கப்பட்டது. சார்லஸ், இளையராஜா மற்றும் அவர்களின் ஊழியர்கள், மற்றும் முகவர்கள் கூறியதை நம்பி எங்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் ரூ

2327 பணிகளுக்கு நேற்று நடந்த TNPSC, Group - 2 தேர்வை, 5.81 லட்சம் பேர் எழுதினார்கள்.

தமிழ்நாடு முழுவதும், 2,327 அரசுப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு  செய்ய நேற்று நடந்த TNPSC, Group - 2 தேர்வை, 5.81 லட்சம் பேர் எழுதினார்கள். ஒருங்கிணைந்த Group- 2 பணிகளில் அடங்கிய பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நடந்தது. 7 லட்சத்து 93,966 பேர் விண்ணப்பித்தனர். நேற்று, 2,763 மையங்களில் நடந்த தேர்வில், 5 லட்சத்து 81,305 பேர் தேர்வெழுதினர். மொத்தம் விண்ணப்பித்தவர்களில் இது 73.22 சதவீதமாகும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் இ ஆ ப, சென்னை எழும்பூர் பிரசிடென்சி மேல்நிலை பள்ளி மையத்தில் நடந்த தேர்வைப் பார்வையிட்டார்.அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: "துணை வணிக வரித்துறை அலுவலர், சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், வருவாய்த் துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, தகுதி வாய்ந்த 2,327 பேரைத் தேர்வு செய்ய தேர்வு நடந்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறுவோர், முதன்மைத் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள். 2024 ஆம் ஆண்டு, 10 தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டு, எட்டு தேர்வுகளுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. மீதமுள்ள இரண்டு தேர்வுகளும் விரைவில் அறிவிக்கை வெளியீடு ந

ஹிந்தி மொழியின் 75வது ஆண்டு விழா - இந்தி திவாஸ்

ராஜ்பாஷா ஹிந்தியின் 75வது ஆண்டு விழா - இந்தி திவாஸ் அன்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் திரு அமித் ஷா அவர்களால் வெளியிடப்பட்ட நினைவு அஞ்சல் தலை 14 செப்டம்பர் 2024 அன்று, இந்தி யூனியனின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியா இந்தி திவாஸைக் கொண்டாடுகிறது. ராஜ்பாஷாவின் வைர விழா என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, 1949 செப்டம்பர் 14 அன்று, தேவநாகரி எழுத்தில் உள்ள இந்தி, இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக நியமிக்கப்பட்டபோது, ​​அரசியல் நிர்ணய சபையால் எடுக்கப்பட்ட வரலாற்றுத் தீர்மானத்தை நினைவுகூருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அதிகாரப்பூர்வ மொழித் துறை, 1975 இல் நிறுவப்பட்டதில் இருந்து, அதிகாரப்பூர்வ விஷயங்களில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இந்த முக்கியமான மைல்கல்லைக் கௌரவிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான ஸ்ரீ அமித் ஷா , 14 செப்டம்பர் 2024 அன்று, புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், இந்தியை அலுவல் மொழியாக 75 வருடங்களைக் குறிக்கும் ஒரு

நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) பொதுக் கொள்கை

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நல்லாட்சி குறித்த 1வது மேம்பட்ட தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தை NCGG நிறைவு செய்கிறது விரிவான பயிற்சித் திட்டத்தில் 10 நாடுகளைச் சேர்ந்த 22 அரசுப் பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர் நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) பொதுக் கொள்கை மற்றும் ஆளுகைக்கான 1வது மேம்பட்ட தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டத்தை முடிக்கிறது, குறிப்பாக லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.  2024 செப்டம்பர் 2 முதல் 13 வரை நடைபெற்ற இரண்டு வார தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டமானது, அர்ஜென்டினா, கோஸ்டாரிகா, எல் சால்வடார், கயானா, ஹோண்டுராஸ், ஜமைக்கா, பராகுவே, பெரு, செயின்ட் கிட்ஸ் & உட்பட 10 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 மூத்த அரசு ஊழியர்களை ஒன்றிணைத்தது. நெவிஸ் மற்றும் சுரினாம். பாராட்டு அமர்வின் போது, ​​நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறையின் (DARPG) செயலாளரும் NCGG இன் டைரக்டர் ஜெனரலுமான ஸ்ரீ வி. ஸ்ரீனிவாஸ், இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையிலான இருதரப்

காவல் துறை தேடும் பின்னணிப் பாடகர் மனோவின் இரண்டு மகன்கள்

சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவிகுப்பம் கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 16 வயது சிறுவனையும், அவனது நண்பர் கிருபாகரன் (வயது 20) இருவரையும் பின்னணிப் பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் ரஃபி மனோ, ஷாகிர் ஆகிய இருவரும் தங்களின் மூன்று நண்பர்களுடன் இணைந்து காரணமில்லாமல் தகாத வார்த்தைகளில் பேசி மண்டியிட வைத்து உருட்டுக்கட்டைகளால் தாக்கியதாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் வளவரவாக்கம் காவல்நிலையத்தில் பணி செய்து வரும் காவலர்கள் பாடகர் மனோவின் வீட்டிற்குச் சென்று விசாரித்த நிலையில் வீட்டில் அவர் மகன்கள் இருவரும் இல்லாமல் தலைமறைவானதையடுத்து பாடகர் மனோ மகன்களின் நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர், பாடகர் மனோவின் மகன்களையும் அவரது நண்பரையும் தேடி வருகிறார்கள் இவர்கள் மூவரும் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியில்  இருப்பதாகவும் செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் தேடுவதாகவும் அவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளதாகவும் அவர்களது செல்போனுக்கு வந்த அழைப்புகள்  வைத்தும் பிடிக்க முடியாமல் காவலர்கள் திணறுதாகவும் தகவல்கள் உள்ள நிலையில்தான் தான் பாடகர் மனோவின்

திருச்செந்துார் கோவிலைச் சுற்றி 1 கி.மீ., சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலைச் சுற்றி 1 கி.மீ., சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது. இது கடற்கரை மேலாண்மைத் திட்டம் மற்றும் ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி வரையறுக்கப்பட்டுள்ளது. அதை மீறி கோவிலைச் சுற்றிலும் விதி மீறி உயரமான ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் உள்ளன. அப்படி ஆக்கிரமி்தது கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். அவற்றை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திருச்செந்துார் செந்தில் ராஜேஷ் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. திருச்செந்தூரில் அங்கீகாரமற்ற கட்டிடங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கீகாரமற்ற கட்டுமானங்களை விரைவில் அகற்ற தேவையான நடவடிக்கையை திருச்செந்துார் நகராட்சி ஆணையர் நான்கு மாத காலங்களுக்குள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டனர்.

ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்ய வலியுறுத்தியவரை மன்னிப்புக் கேட்க வைத்த மத்திய அமைச்சர் பலரும் கண்டனம்

உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு இருக்கிறது.    ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்யுங்கள்” என்பது குறித்து தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோயம்புத்தூர் அன்னபூர்ணா உணவகக் குழுமத் தலைவருமான சீனிவாசன் சில நிமிடங்கள் பேசினார்.  இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விளக்கம் அளித்திருந்தார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக காணொளி ஒன்றும்  பரவியது.இந்த விவகாரம் தற்போது அதிகம் விவாதிக்கும் நிலையில், மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையேயான, ‘தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பகிர்ந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியினரின் செயலுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என லண்டனில் உள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்ப