கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம் பட்டி திமுக பிரமுகரான பத்மஸ்ரீ பாப்பம்மாள் (வயது 109) காலமானார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற தேக்கம்பட்டி பாப்பம்மாள் முதுமை காரணமாக அவரது வீட்டில் உயிரிழந்தார்.
1914 ஆம் ஆண்டில் பிறந்த பாப்பம்மாள் பாட்டி வயது 109 திமுகவின் முன்னோடியாவார் செப்டம்பர் மாதம் 17-ஆம் நாள் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவரான பாப்பம்மாள் திமுக நிறுவனத் தலைவர் காலம்சென்ற
பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை அடுத்த தலைவர் காலம்சென்ற டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மீதும் பற்றுக் கொண்டு, திமுக துவங்கிய நாள் முதல் பணியாற்றியவர்.
1965-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத்தில் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் துவங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அனைத்து போராட்டக்களங்களிலும் கலந்து கொண்டவர்.
1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பம்மாள் 1964- ஆம் ஆண்டில் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பிலிருந்தார்.
1970-ஆம் ஆண்டு துவங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.
1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார்.
தனது இறுதிக்காலம் வரையில், சுறுசுறுப்பாக வயலில் வேளாண்மைப் பணிகள் செய்து வந்தவர் பாப்பம்மாள்
நேற்று காலமானார் அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்