திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு ரூபாய்.7,000 லஞ்சம் சர்வேயருடன் பெண் உதவியாளரும் கைது
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம் கண்ணு மேய்க்கிபட்டி சரண்யாவிடம் ஏழாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கரிகாலி பிர்க்கா சர்வேயர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார்.
கரிகாலி கிராமத்திலுள்ள பூர்விக நிலத்தை உட்பிரிவு செய்து, தந்தை பெயரில் பட்டா மாற்றம் செய்யக் கோரி விண்ணப்பித்த சரண்யாவிடம் பாரதிதாசன் லஞ்சம் கேட்கவே
அதை கொடுக்க விருப்பம் இல்லாமல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார் பின்னர் அவர் பணத்துடன் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்றுள்ளார்.
தான் வெளியில் இருப்பதால், பணத்தை உதவியாளர் சுதாவிடம் கொடுக்கும் படி பாரதிதாசன் கூறியதையடுத்து
பணத்தை வாங்கிய சுதாவையும், பாரதிதாசனையும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள்