நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் 'ரொபாக்கோ'வின் சொத்துக்களை முடக்க அரசாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜனங்கள் பணத்தை ஏமாற்றி நில மோசடி வழக்கில் சிக்கிய நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் 'ரொபாக்கோ'வின் சொத்துக்களை முடக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்
என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி நடராஜன் தாக்கல் செய்த வழக்கில் ரொபாக்கோ பிராப்பர்ட்டீஸ் நிறுவன முதலீட்டாளர்கள் நலச் சங்க தலைவராக உள்ளதால் மதுரையில் பாலசுப்பிரமணியன் என்பவர் நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் துவக்கினார். அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி, குறைந்த விலையில் வீட்டு மனைகள் (பிளாட்கள்) கிடைக்குமென நிறுவனம் அறிவிப்பு செய்தது. நிறுவனம் நம்பிக்கையானது நம்ப வைக்கும் வகையில் முதலீட்டாளர்களுக்கு வட்டி மற்றும் வீட்டு மனைகள் துவக்கத்தில் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 250 நிதி நிறுவனங்களை பாலசுப்பிரமணியன் துவக்கினார். அந்த நிறுவனங்கள் சிலவற்றின் இயக்குனர்கள் சார்லஸ், இளையராஜா. ஆகியோரால் சிவகங்கை மாவட்டத்தில் ரொபாக்கோ நிறுவனம் துவக்கப்பட்டது.
சார்லஸ், இளையராஜா மற்றும் அவர்களின் ஊழியர்கள், மற்றும் முகவர்கள் கூறியதை நம்பி எங்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் ரூபாய்.35 கோடியை முதலீடு செய்தனர். அதற்கு ரசீதுகளும் வழங்கப்பட்டன. உறுதியளித்தபடி டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி அல்லது வீட்டு மனைகளை அந்த நிறுவனம் வழங்கவில்லை.
சார்லஸ், இளையராஜா உள்ளிட்ட சிலருக்கு எதிராக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் பிரிவில் 2023 ஆம் ஆண்டில் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் கைதான சார்லஸ், இளையராஜாவிற்கு மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு (டான்பிட்) நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. அவர்கள் வெளியே வந்த பிறகும், புதிய நிறுவனங்களைத் துவக்கி மக்களை ஏமாற்றும் செயலை மீண்டும் துவக்கியுள்ளனர்.
முதலீட்டாளர்களிடம் புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்து வற்புறுத்துகின்றனர். அந்த இருவர் மற்றும் சிலருக்குச் சொந்தமான சொத்துகளின் பட்டியலை காவல் துறையினரிடம் அளித்தோம். அவர்கள் சொத்துக்களை முடக்க தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்ப முன்வரவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர்களைப் பாதுகாப்பதில் காவல் துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர்.மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்தனர். இருவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டார். நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அந்த வழக்கை விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனம் மொத்தம் ரூபாய்.172 கோடியை வழங்க வேண்டியுள்ளது. சார்லஸ், இளையராஜா ரூபாய்.6 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜாமினில் வெளியே வந்த பின்னர் சாட்சிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் புகார்களை வாபஸ் பெறுமாறு மிரட்டுகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்: பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று தெரிவித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர்: நிறுவனத்தின் பல சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை இடைக்காலமாக முடக்குவதற்கு அரசாணை வெளியிடுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. என்றார் இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: சொத்துக்களை உடனடியாக முடக்க சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் சட்டப்படி அரசாணை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலர் விரைவாக மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை, முன்னேற்றம் குறித்து அரசு தரப்பில் செப்டம்பர்.25 ஆம் தேதியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என உத்தரவிட்டார். இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டம், 1934, (அத்தியாயம் III-B) ன் கீழ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணிக்கிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வேளாண்மை, தொழிற்சாலை பணிகள் மேற்கொள்ளவோ, அசையாச் சொத்துகளை வாங்குவதோ, விற்பதோ அல்லது கட்டுமானத் துறையில் நேரடியாக ஈடுபடவோ முடியாது. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் எத்தகைய வைப்புத் தொகைகளையும் பெறக் கூடாது. இருப்பினும் இந்திய ரிசர்வ் வங்கி 81 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து நிரந்தர வைப்புத்தொகை பெற அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் வேளாண்மை, தொழில்துறை செயல்பாடுகள், எந்தவொரு பொருட்களையும் வாங்குவது அல்லது விற்பனை செய்வது (பத்திரங்களைத் தவிர) அல்லது எந்தவொரு சேவைகளையும் வழங்குதல் மற்றும் அசையாச் சொத்தின் விற்பனை அல்லது கொள்முதல் அல்லது கட்டுமானம் ஆகியதுறைகளில் வங்கி அல்லாத நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது.
9 நவம்பர் மாதம் 2017 ஆம் தேதியன்று, இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வேலையை வெளியில் கொடுத்து (அவுட்சோர்சிங்) செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக் காட்டும் அறிவிப்பை வெளியிட்டது. புதிய விதிமுறைகளின்படி, உள் தணிக்கை, முதலீட்டுத் துறையை நிர்வகித்தல், உங்கள் வாடிக்கையாளர் (KYC) அறிந்து கொள்வதற்கான மூலோபாய மற்றும் இணக்கச் செயல்பாடுகள் மற்றும் கடன்களை அனுமதித்தல் மற்றும் வசூலித்தல் போன்ற முக்கிய மேலாண்மைச் செயல்பாடுகளை வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் வெளிநபர்களுக்கு (அவுட்சோர்சிங்) வழங்க முடியாது.
வங்கியல்லாத நிதிநிறுவனப் பணியாளர்கள் அவுட்சோர்சிங் செயல்பாட்டைச் செய்ய வேண்டிய அளவிற்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் தகவல்களை அணுகிப் பெற வேண்டும்.
நேரடி நிதி உதவி மற்றும் கடன் மீட்பு முகவர்களுக்கான நடத்தை விதிகளை வங்கியல்லாத நிறுவனங்களின் கண்காணிப்பு வாரியங்கள் அங்கீகரிக்க வேண்டும். கடன் வசூலைப் பொறுத்தவரை, வங்கியல்லாத நிதிநிறுவனங்களும் அவற்றின் வெளி முகவர்களும் எந்த விதமான அச்சுறுத்தலையும் துன்புறுத்தலையும் நாடக்கூடாது. அனைத்து வங்கியல்லாத நிதிநிறுவனங்கள், தங்கள் சேவை தொடர்பான குறைபாடுகளை வாடிக்கையாளர்கள் கேட்டறியவும், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கவும் தனி அமைப்பை நிறுவிக்கொள்ள வெளி நிறுவனங்களை அவுட்சோர்சிங் மூலம் அமர்த்திக் கொள்ள வேண்டும். வேண்டும்.முதலீடு, குத்தகை, தவணைத்திட்டம், கடன் என்ற வகை நிறுவனமல்லாத, ஏதாவது ஒரு திட்டத்தின் அல்லது ஏற்பாட்டின் அல்லது ஏதாவது ஒருவகையின் கீழ் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதை தனது முதன்மை வியாபாரமாகவுடைய, ஒருவகை வங்கிசாரா நிதி நிறுவனத்தை (NBFC), எஞ்சியுள்ள வங்கிசாரா நிதி நிறுவனம் என்பர். இந்த நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி, ரொக்கச் சொத்துக்களைத் தவிர முதலீடுகளையும் வைத்திருக்க வேண்டும். இந்த வகை நிறுவனங்கள் முதலீட்டை பெறும் வழிமுறைகள், முதலீட்டாளர்களின் தொகையை பயன்படுத்துவது குறித்த விதிமுறைகள் ஆகிய செயல்பாடுகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களிலிருந்து மாறுபடுகின்றன. இந்த நிறுவனங்கள் உச்ச வரம்பில்லாமல் வைப்புத் தொகையை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு எஞ்சியுள்ள வங்கியல்லாத நிதி நிறுவனமும் தன்னால் ஏற்படுத்தப்பட்ட வைப்புத்தொகை மற்றும் செய்யப்பட்ட முதலீடுகளின் தொகை, வைப்பாளர்களுக்குத் தர வேண்டிய மொத்த கடன் தொகைகளை விட குறைவாய் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் வைப்பாளர்களின் நலனை பாதுகாக்க, இந்த நிறுவனங்கள், பாதுகாப்பானவையும், ரொக்கத்தன்மையுள்ளவையுமான கடன் பத்திரங்களை உள்ளடக்கிய, மத்திய மற்றும் மாநில அரசாங்கக்கடன் பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் (SCB) நிலை வைப்புத்தொகைகள், வைப்புத்தொகைச் சான்றிதழ்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்குகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது ஐந்து தமிழ்நாடு NBFC நிறுவனங்களின் உரிமம் ரத்து..! ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை..!
இந்தியாவில் வங்கி மோசடிகள், முறையாக நிர்வாகம் செய்யாத நிதி நிறுவனங்கள் மூலம் மக்கள் தங்களுடைய பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் காரணத்தால் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் இருக்கும் அனைத்து நிதி நிறுவனங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறது, அதிலும் குறிப்பாக சிறு நிதி நிறுவனங்கள் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆர்பிஐ இன்று நான்கு NBFC நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்து, பிற 13 NBFC நிறுவனங்கள் தங்களுடைய பதிவுச் சான்றிதழைத் தானாக முன்வந்து ஒப்படைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நான்கு NBFCகளின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ய முக்கிய காரணமாக இருந்தது, வங்கிச் சட்டம் 1934 இன் பிரிவு 45-IA (6) கீழ் மீறல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் ராஜஸ்தானின் பாரத்பூர் இன்வெஸ்ட்மெண்ட் லிட், மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட KS ஃபின்லீஸ் லிமிடெட், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பில்ட் கான் ஃபைனான்ஸ் லிமிடெட் (Build Con Finance Limited) மற்றும் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆப்ரேட்டிங் லீஸ் அண்ட் ஹயர் பர்ச்சேஸ் நிறுவனம் லிமிடெட் (Operating Lease and Hire Purchase Company Limited) ஆகியவை அடங்கும். NBFC உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள், RBI சட்டத்தின் படி இனி எவ்விதமான நிதி நிறுவனத்தின் வணிகத்தை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நான்கு NBFCகளின் பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்ய முக்கிய காரணமாக இருந்தது, வங்கி சட்டம் 1934 இன் பிரிவு 45-IA (6) கீழ் மீறல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
கருத்துகள்