ஜாதியப் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமெனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும்.
ஜாதியை குறிக்கும் வண்ணக்கயிறுகள், ஜாதியைக் குறிக்கும் நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிரந்தர டீன்களை நியமிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை, திருச்சி, விருதுநகர் மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், பள்ளிகளில் ஜாதிய மோதல்களை தடுப்பதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சுப்பிரமணியன் விமர்சித்தார்.
"பள்ளிகளில் ஜாதிய மோதல்களைத் தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அளித்த பரிந்துரைகள் என்னைப் பொறுத்த அளவில் ஏற்புடையதல்ல. ஜாதியப் பாகுபாடு எண்ணங்களை ஒழிக்க வேண்டும் எனில் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கைக்குப் பிறகே, நான் பொட்டு வைத்து நீதிமன்றம் வருகிறேன்" என நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கருத்துகள்