அரசு அலுவலகங்களில் கட்டாய லஞ்சம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வாக்குமூலம்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால் தான் கோப்புகள் தேக்கமடையாமல் விரைவாக நகர்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பகிரங்கமாகவே குற்றச்சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் புனே பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் பேசியதாவது;
லஞ்சம் கொடுத்தால் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வேகமாகப் பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை என்ற நியூட்டனின் விதி போல் அரசு அலுவலர்கள் செயல்படுகின்றனர். சாலை விபத்துகள், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நெடுஞ்சாலை திட்டங்களுக்கான தவறான திட்ட அறிக்கைகள் காரணமாக உள்ளன. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் வழி வந்த அனுபவம் பெற்றவர்கள் உள்ளனர். ஆவணங்கள் மேல் லஞ்சமென வைத்தால் அது வேகமாக நகரும். நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க ஒரு காலக்கெடு அவசியம். மற்றும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிவு எடுக்கும் முறை கொண்டு வர வேண்டும். தற்போது நடப்பதிலிருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க காலக்கெடு அவசியம். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிவெடுக்கும் முறை கொண்டு வர வேண்டும்". எனப் பேசியுள்ளார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் 14-வழி நெடுஞ்சாலையை அடல் சேது பாலத்திலிருந்து தொடங்கி புனேவின் ரிங் ரோட்டுடன் இணைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இது மும்பையிலிருந்து பெங்களூர் செல்லும் பயணிகள் புனேவை பைபாஸ் செய்ய அனுமதிக்கும், இது நகரத்தின் போக்குவரத்தைக் குறைக்க உதவும். கூடுதலாக, இந்தச் சாலை சத்ரபதி சம்பாஜி நகருக்கு நேரடி அணுகலை வழங்கும். இந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் கட்டுமானத்தைத் தொடங்க இலக்கு வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் நிதின் கட்கரி. எல்லாம் சரி தான் இதில் ஒரு மத்திய அமைச்சர் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை எனக் கூறுவதை விட அதை தடுக்க நடவடிக்கை என்ன என்று தெரிவித்திருந்தால் வரவேற்கலாம்
அதை விடுத்து அமைச்சரே லஞ்சம் எனக் கூறுவது நிர்வாகத் திறன் இல்லாமல் அரசு உள்ளது என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் பரவும்.. தவறு செய்தால் உடன் தண்டனை வரும் என்ற பயம் அரசு ஊழியம் செய்யும் பணியாளர்கள் மத்தியில் இல்லாமல் இருப்பது தான் லஞ்சம் பெருகும் நிலைக்குக் காரணம் என்பது மூத்த அமச்சருக்கு நன்கு தெரியும் இருந்தும் அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் யாருக்கு எதிராக உள்ள அரசியல் என்பதை உணர வேண்டும். இதில் பொது நீதி யாதெனில்:- அரசு மீதான பயம் பணியாளர்களுக்கு இல்லாமல் போனதால் வந்த நிலை தான் இது .
கருத்துகள்