மறியல் போராட்டத்தில் தலைமுடியை இழுத்து தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டைக்கு புதிய துணைக் காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென மாற்றப்பட்டது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி ஆகஸ்ட் மாதம் 27- ஆம் தேதியிலேயே இடம் மாற்றப்பட்டார். அதாவது கட்சி பேரணியின் போது சரியான அணுகுமுறை இல்லை என அவர் மீது சிலர் குற்றச்சாட்டு தெரிவித்ததாகவும். அருப்புக்கோட்டையில் உள்ள காவல் நிலையங்களில் பெண் காவல் அலுவலர்கள் அதிகமுள்ள காரணங்களால் காயத்ரி மாற்றப்பட்டிருந்த நிலையில், அதற்கு பின்னர் தான் அவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. எனவே அந்தச் சம்பவத்துக்கும், காயத்ரி இடமாற்றத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என மக்கள் பேசும் நிலையில் இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள்