நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடகத் துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.எனவே,மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதென மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே., நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயம் ரவி, 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தீபாவளி, பொங்கல் என பண்டிகை தினங்களில் ஃபேமிலி போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். : இந்த நிலையில், ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவல் அடிப்படையில் விசாரித்த போது
ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் அடிக்கடி சண்டைகள் நடப்பதாகவும், அதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதே நேரம், பாடகியுடன் ஜெயம் ரவி நெருங்கி பழகி வருவதாகவும், இது தான் அவர்களின் விவாகரத்து முடிவுக்கு காரணம் எனகா கூறப்படுகிறது. பயில்வான் ரங்கநாதனின் சோஷியல் மீடியாவில் கிளப்பிய இந்த விவகாரம் இப்போது உண்மையாகிறது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். அதில், ஜெயம் ரவியின் தந்தை மோகன், இஸ்லாமியராக பிறந்து இந்துவாக வளர்ந்தார். திரைப்பட எடிட்டரான இவர், தெலுங்கு டப்பிங் வெற்றிப்படங்களை எடுத்து தமிழில் வெளியிட்டு பிரபலமானார். அதைத் தொடர்ந்து, பல திரைப்படங்களை தயாரித்து தெலுங்கில் தயாரிப்பாளராக மாறினார். மோகனைத் தொடர்ந்து அவரது மகன் மோகன் ராஜா, தம்பி ஜெயம் ரவியை வைத்து ஜெயம் என்ற படத்தை இயக்கினார் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜெயம் ரவி திரைப்பட கதாநாயகனானார். ஆர்த்தியும், இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவரின் தாயார் சுஜாதா விஜயகுமார், பணக்காரரான இவர், சன் தொலைக்காட்சியில் பல தொடர்களைத் தயாரித்துள்ளார். இவர் மருமகன் ஜெயம் ரவியை வைத்து இரண்டு மூன்று படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால், அந்தப் படங்கள் சரியாக ஓடவில்லை. இப்போது ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் விவாகரத்து என் பேச்சு அடிபடுவதற்கு காரணமே மாமியார் சுஜாதா விஜயகுமார் தானாம். ஏன் என்றால், எந்த தயாரிப்பாளர் கதை சொல்ல வந்தாலும், ஜெயம் ரவி முதலில் மாமியாரிடம் கதை சொல்லுங்கள் அவர்கள் ஒகே என்றால், நான் கதை கேட்கிறேன் என்று சொல்லுவாராம் இதனால் கடுப்பான, தயாரிப்பாளர் யாரோ ஒருவர் கிளப்பி விட்ட கதை தான். இந்த விவாகரத்து வதந்தி இதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசினாலும் இப்போது அதுவே உண்மையாகிறது . நடிகர் ஜெயம் ரவியின் கதை நமக்குத்தெரியும். ஆனால் யார் இந்த ஆர்த்தி என உற்று நோக்கினால்
கல்பனா எனும் நடிகை. கன்னடத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தன் சம்பாத்தியத்தில் வாங்கியதாக? அல்லது அதன் உண்மை உரிமையாளரிடம் ஏமாற்றிக் கைப்பற்றிய சென்னையின் முக்கியமான சாந்தோம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில் ஒரு பீச் ஹவுஸ் இருக்கிறது. அது வீடு அல்ல. அது முக்கிய நாட்டுக் கோட்டை செட்டியார் குடுபத்திற்குச் சொந்தமான ஒரு பங்களா.
நீங்கள் 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உள்ள திரைபாபடங்களைப் பார்த்தால் அதில் ஒரு வீடு வரும். மாடிப்படியோரமாக சுவற்றிலிருந்து ஒரு யானைத்தலை துதிக்கையை நீட்டிக்கொண்டிருக்கும். அந்த வீடு ஒரு பங்களா அது தான் கல்பனா ஹவுஸ். அதை திரைப்பட படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டே பல கோடிகள் சம்பாதித்திருக்கிறார்கள். இங்கு வராத, நடிக்காத நடிகர் நடிகையே கிடையாது. வடக்கு முதல் தெற்கு வரை எல்லோரும் வந்திருக்கிறார்கள். மன்மதலீலை படத்தில் வரும்..
இந்த கல்பனாவுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் விஜயகுமார், மகள் ரஞ்சனி. மகன் விஜயகுமார் பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்தவர். ரஜினிகாந்த் அதே இன்ஸ்ட்டியூட்டில் சீனியர். 1977 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் முற்றிலும் புதுமுகங்களை வைத்து 'ஒரு கோவில் இரு தீபங்கள்' படத்தை இயக்க இருக்கிறார். அப்போது புதுமுகங்களுக்கான ஸ்க்ரீன் டெஸ்ட் சென்னையில் நடந்தது.
இந்த ஸ்க்ரீன் டெஸ்ட்டில் ரங்கராஜ் என்கிற வாலிபர் கலந்து கொண்டார். வானம் பொழிகிறது பூமி விளைகிறது என சிவாஜி வசனங்களை பேச முத்துராமனோ உங்கள் நடிப்பைக் காட்டுங்கள். சிவாஜி போல் பேச வேண்டாம் எனக்கூற இதோ வருகிறேன் என நழுவி விட்டார். அவர் தான் பின்னாளில் சத்யராஜ். சேகர் வெங்கட்ராமன் என்கிற வாலிபரை முத்துராமன் டெஸ்ட்டுக்கு அழைக்க அவரோ நமக்கு சினிமா சரிப்படாது எனக்கூறி தன் நண்பன் விஜயக்குமாரைப்பற்றி கூறுகிறார். விஜயகுமாரை சேகரே கல்பனா ஹவுஸில் வைத்து விதவிதமாக போட்டோ எடுத்து முத்துராமனிடம் அனுப்பி வைக்கிறார். முத்துராமன் விஜயகுமாரை தேர்வு செய்கிறார். கல்பனா ஹவுஸ் வாடகையை குறைக்கலாம் என்பதற்காக இருக்கலாம்.
ஏற்கனவே ஒரு விஜயகுமார் நடிகராக இருப்பதால் விஜய் எனப்பெயர் மாற்றுகிறார்கள். அவரை அனுப்பி வைத்த சேகர் தான் பின்னாளைய நடிகர் S.Ve.சேகர். நாயகியாக சரோஜா என்கிற அதே இன்ஸ்ட்டிடியூட் மாணவி. நடிகை சுஜாதாவின் சகோதரி தான் சரோஜா என்கிற நடிகை .
மேலும்
எல்.ஐ.சி.நரசிம்மன், விஜய், சரோஜா போன்றோர் நடித்த அந்த கருப்பு வெள்ளைப்படம் 'ஒரு கோவில் இரு தீபங்கள்' வெளிவந்ததே தெரியாமல் ஓடியே போய்விட்டது. எஸ்.பி.முத்துராமனே மறந்து விட்டார். படத்தோல்வியால் விஜய் நகைத்தொழிலுக்கு போய்விட்டார். அதிலேயே நல்ல வருமானம். சுஜாதாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். அனுயா, ஆர்த்தி. அதில் இரண்டாவது குழந்தை தான் ஆர்த்தி.
விஜயகுமாரின் சகோதரி ரஞ்சனி மலையாள இசையமைப்பாளர் கே.ஜே.ஜோய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கே.ஜே.ஜோய் அக்கார்டியன் வாசிக்கும் ஒரே கலைஞர். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் வாசித்திருக்கிறார். கீ போர்டை தென்னிந்திய சினிமாவில் முதன் முதலில் கொண்டு வந்தவர். கே.ஜே.ஜோய் மலையாளத் திரைப்படங்களில் நல்ல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தவர். லவ்லெட்டர், லிஸா, ஆராதனா போன்றவை அவரின் ஹிட் படங்கள். ஜோய்-ரஞ்சனி இருவருக்கும் ஐந்து குழந்தைகள். கடைசி காலத்தில் படுத்த படுக்கையாகி 2024 ஆம் வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் தேதியில் ஜோய் காலமானார்.
கல்பனா ஹவுஸ் பாகம் பிரிந்தது முதல் ஷுட்டிங்குக்கு பயன்படுத்துவதில்லை எனத் தெரிகிறது. பல பேருக்கு பிரித்து வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். இன்றைய மதிப்பில் பலநூறு கோடி அந்த இடம் மட்டும். ஆர்த்திக்கு சுஜாதா ஜெயம் ரவியை பேசி மணம் முடித்தனர். சுஜாதாவுக்கு திரைத்துறையில் எல்லோரிடைமும் பழக்கம் உண்டு. சன் டிவியில் ஸ்லாட் வாங்கி சுஜாதா விஜயகுமார் சீரியல் தயாரித்துக் கொண்டிருந்தார். கண்மணி சீரியல் இவரது தயாரிப்பு தான். தனது தோழி குஷ்புவின் கணவர் சுந்தர்ஜியை நாயகனாக்கி 'வீராப்பு' படத்தை தயாரித்தார் சுஜாதா. மருமகன் ஜெயம் ரவி கால்ஷீட் கொடுக்க திரைப்படத்தயாரிப்பிலும் இறங்கினார். அடங்கமறு, பூமி, ஸைரன்.
'அடங்க மறு' படத்தை சுஜாதாவும், கே.ஜே.ஜோயி மகன் ஆனந்த் ஜோயும் இணைந்து தயாரித்திருந்தனர். ஆனந்த் ஜோய் - சீரியல் நடிகை பவனி ரெட்டி காதல் முன்பே பல பத்திரிகைகளில் கிசுகிசுவாகவெ வந்திருக்கிறது.
ஜெயம் ரவி பெரிய குடும்பத்தின் மருமகன். ஆர்த்தி-ரவி இன்ட்டிமேட் ரசிகர்களும் அறிவார்கள். பலரும் விவாகரத்து செய்தியை வெளியிட்ட சபிதா ஜோஸப்பை சபித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
(ரவியின் மாமனாரைப்பார்க்க 'எந்தப்பாதை எங்கே பயணம்' பாடலை பார்க்கவும்)இந்த விவாகரத்து முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆரத்தி தாய் குடும்பம் தான். அவர்கள் ரவியின் கால்சீட், கதை கேட்பது என எல்லாவற்றிலும் தலையிட தொடங்கியதும் இந்த பிரச்சினை வலுக்க தொடங்கியது.
அவர்கள் ஜெயம் ரவியை வைத்து தயாரித்த திரைப்படங்களும் மிக மோசமான லிஸ்டில் இணைந்தது.ஆரத்தி பெரிய தயாரிப்பாளரின் மகள் அவருக்கு கோலிவுட்டின் நடிகைகள் நெருங்கிய தோழிகள்தான். அந்த சமயத்தில் பார்ட்டிகளில் கலந்துகொண்ட ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பரப்பி அதனால் தனுஷ் மீது பழியை போடுவது சரியாக இருக்காது.
அவர்கள் ஜெயம் ரவியை வைத்து தயாரித்த திரைப்படங்களும் மிக மோசமான லிஸ்டில் இணைந்தது.ஆரத்தி பெரிய தயாரிப்பாளரின் மகள் அவருக்கு கோலிவுட்டின் நடிகைகள் நெருங்கிய தோழிகள்தான். அந்த சமயத்தில் பார்ட்டிகளில் கலந்துகொண்ட ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பரப்பி அதனால் தனுஷ் மீது பழியை போடுவது சரியாக இருக்காது.
கருத்துகள்