தமிழ்நாடு வருவாய்த் துறையில் பணியாற்றியவர்கள் உங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தைத் ஊழல் செய்து தவறாக இன்னொருவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்திருந்து:
அதனை நீங்கள் பழையடி உங்கள் பெயருக்கே மாற்றம் செய்ய வைக்க அவர்களிடம் விண்ணப்பித்திருந்து, அது உங்களுக்கு மீண்டும் சேவை அளிக்காவிடில், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதற்கான சேவையும், உரிய இழப்பீடும் கோரலாம்.
என ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழக்கு எண்: சி சி. 39/2015 நாள்: 19/10/2016 ன் படி
அரசு துறைகளில் தாங்கள் செய்த தவற்றை மறைக்க கோப்புகள் காணவில்லை என பதில் அளிப்பதை வழக்கமாக கொள்வார்கள் அப்படிச் சொன்னால் கீழ்கண்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தச் சொல்லுங்கள்.( கோப்பு காணாமல் போனால் F.I.R முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றம் – SB CWP – 7835/2007 நாள் : 26-09-2007 )
கோப்பு காணவில்லை என Case of Missing File.
தாசில்தாருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை:
அரியலூர்: நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க வேண்டும் என விண்ணப்பித்த விவசாயியை அலைக்கழித்த தாசில்தாருக்கு, மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மாவட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, வயது 47. விவசாயியான இவர், கீழப்பழூவூர் கிராமத்தில் வாங்கிய நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்கக்கோரி, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 21 ஆம் தேதியில் அரியலூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தார். ஆனால், இவரது விண்ணப்பத்தின் மீது, எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பாலசுப்பிரமணி பெரம்பலூர் மாவட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு செலவுக்காக, 2,000 ரூபாய் பாலசுப்ரமணிக்கு வழங்கவும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டது.
இதன் பின்னரும், நடவடிக்கை இல்லை. இதை அடுத்து, மீண்டும் பாலசுப்ரமணி அரியலூர் மாவட்டம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நுகர்வோர் நீதிமன்ற குறைதீர்ப்பு மன்ற தலைவர், ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்ததில், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் பணியிலிருந்த, அரியலூர் தாசில்தார் வைத்திஸ்வரனுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
கருத்துகள்