தேசிய மின்னணு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தில்லியில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது
மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அறிவியல் அமைப்பான தேசிய மின்னணு - தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT), தில்லியில் வேலைவாய்ப்பு முகாமை இன்று (2024 செப்டம்பர் 29) நடத்தியது.
என்ஐஇஎல்ஐடி-யின் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதற்காக புது தில்லி, ஜனக்புரி, பங்கா சாலையில் உள்ள என்ஐஇஎல்ஐடி அலுவலகத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
16 நிறுவனங்கள் அந்தந்த நிறுவனங்களில் 1000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1300-க்கும் மேற்பட்டோர் பதிவு பங்கேற்றனர்.
என்ஐஇஎல்ஐடி தலைமை இயக்குநர் மற்றும் என்ஐஇஎல்ஐடி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மதன் மோகன் திரிபாத் என்ஐஇஎல்ஐடி செயல் இயக்குநர் சுபான்ஷு திவாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள்