திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் குண்டாறு பகுதியில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.கொடைக்கானல் கூக்கால் கீழ் குண்டாறு பகுதியில் நகராட்சி பொது குடிநீர் கிணறு உள்ளது அந்தக் கட்டிடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில்
ஒரு புலி நடந்து செல்வது பதிவானது. அதே போல வத்தலக்குண்டு சாலையில் உள்ள குருசரடி மயிலாடும்பாறை இடையே உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த புலி சாலையில் கடந்தது அந்த வழியாக வந்த வாகன ஒட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,'' கீழ் குண்டாறு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். புலி நடமாட்டத்தை கண்டறிய டிராப் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன'' என்றார்.
கருத்துகள்