பச்சை முத்து உடையார் என்ற பாரிவேந்தர் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவு அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை கோரி பச்சைமுத்து உடையார் என்ற பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி ரூபாய்.88.66 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை யின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க பச்சை முத்து உடையார் என்ற பாரிவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த பொத்தேரி பகுதியிலுள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்காக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்து ஏமாற்றியதாக 2016 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. மாணவர்களை ஏமாற்றியதாக வேந்தர் மூவிஸ் இயக்குநராக இருந்த அவரது மகன் மதன், எஸ்ஆர்எம் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் பச்சைமுத்து உடையார் என்ற பாரிவேந்தர் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மாணவர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றிய குற்றச்சாட்டில் பாரிவேந்தர் என அழைக்கப்படும் பச்சைமுத்து உடையாரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளி வந்த பச்சை முத்து உடையார் என்ற பாரிவேந்தர், பணம் கொடுத்து ஏமாந்த மாணவர்களுக்கு ரூபாய்.88 கோடியை திருப்பி அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் ரூபாய்.88 கோடி சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் பச்சை முத்து உடையார் என்ற பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்துவுக்கு 2022, மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அமலாக்கத்துறை யினர் சம்மன் அனுப்பினர்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்ஆர்எம் கல்விக் குழும நிறுவனங்களின் தலைவரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பச்சமுத்து உடையார் என்ற பாரிவேந்தர் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை யின் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன்.
ரூபாய் 88.66 கோடி மோசடி தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என பச்சை முத்து உடையார் என்ற பாரிவேந்தருக்கு உத்தரவிட்டுள்ளது டன் மனுவை தள்ளுபடி செய்தது.
கருத்துகள்