பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை மாதம் சென்னையில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது
தொடர்பாக ஏற்கனவே 28 பேர் கைது செய்யப்பட்டு ரௌடி திருவேங்கடம் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு முக்கியக் குற்றவாளிகளியாக கருதப்படும் ரௌடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடினர். தலைமறைவு சீசிங் ராஜா ஆந்திராவில் இருப்பதாக தகவல் வரவே தனிப்படைக் காவல்துறையினர் ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில் சீசிங் ராஜாவை நேற்றுக் கைது செய்தனர்.
சீசிங் ராஜா மீது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தவிர மேலும் 5 கொலை வழக்குகளும் மற்றும் 33 பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல். சீசிங் ராஜா, ரௌடி ஆற்காடு சுரேஷுக்கு நெருக்கமாக இருந்தவன் எனவும், வெவ்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில் அண்மையில் வழக்கு ஒன்றில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தாம்பரம் பகுதியில் காவல்துறையினர் சுவரொட்டி ஒட்டி இருந்தனர்.
நேற்று கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை வேளச்சேரியில் ஏற்கனவே பதியப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய இன்று அதிகாலையில் நீலாங்கரை அருகில் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆயுதங்களை எடுத்த சீசிங் ராஜா காவலர்களை நோக்கிச் சுட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதில் காவலர்கள் வந்த வாகனங்கள் மீது குண்டுகள் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புக்காக ஆய்வாளர் விமல் என்பவர் சீசிங் ராஜாவை சுட்டதில், 2 குண்டுகள் பாய்ந்து சீசிங் ராஜா உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நரசிம்மன் – அங்கம்மா என்பவர்களின் மகன் சீசிங் ராஜா ரௌடியாக மாறிய ராஜா. சென்னை கிழக்குத் தாம்பரத்தில் வசித்து வந்துள்ளான் ராஜா, 9-ம் வகுப்புவரை படித்து விட்டு கராத்தே கற்றுள்ளார். தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு கராத்தே மாஸ்டராக மாறி அவனது நண்பர்களுக்காக அடிதடி போன்ற பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கத் துவங்கிய ராஜா. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை அடாவடியாகப் பறிமுதல் செய்வது தான் பணி. ஒரு வாகனத்தை பறிமுதல் செய்யும்போது, காவல்துறையில் சிலரை சரிக்கடி பின்னர் சீஸ் செய்து கொண்டு போனதாகச் சொல்வோம் அல்லவா அப்படி, கடனை திருப்பித்தராதவர்களின் வாகனங்களை இவர் பறிமுதல் செய்ததால் பெற்ற பெயர்தான் சீசிங் ராஜா.
அப்போதே தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபல ரௌடியுடன் தொடர்பு ஏற்படுத்தி ராஜா, மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் புரோக்கர் கட்டப்பஞ்சாயத்து செய்வது என ரௌடிகளின் சாம்ராஜ்ஜியத்துக்குள்ளும் நுழைந்துள்ளார். இதன் நீட்சியாக ஆந்திராவில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபராக அறியப்பட்டான் சிசிங் ராஜா. தொடர்ந்து, முக்கிய ரௌடியாக உருவெடுத்தவன்சென்னை மற்றும் ஆந்திராவில் கொலை செய்து கூலிப்படைத் தலைவனாகவும் மாறியுள்ளான். இதற்கிடையே, காவல்துறை நெருக்கடி காரணமாக ஆந்திராவில் இருக்கும் அவன் வீட்டில் பதுங்கியபடியே, சென்னையில் பல்வேறு குற்றச் செயல்களை அரங்கேற்றியுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்.
கடந்த இரண்டு வருடங்களாக கூலிப்படைத் தலைவனாக உருவெடுத்த சீசிங் ராஜா, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்து சிங்கம் பட பாணியில் ஆட்களை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டும் செயலிலும் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நீதிமன்றத்தில் வழக்கு உள்ளாதா எனத் தகவல்கள் இல்லை இப்படியான சூழலில்தான், ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் இவனுக்குத் தொடர்பிருப்பதாக கூறி காவல்துறையினர் தேடி வந்தனர். இதன் காரணமாக தற்போது காவல்துறை என்கௌண்டர் மூலம் உயிரிழந்த சீசிங் ராஜா உடல், உடற்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ளது. ரௌடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை உயர் காவல் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர். அங்கும், ராயப்பேட்டை மருத்துவமனையிலும் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளநிலையில், சீசிங் ராஜாவின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். சீசிங் ராஜாவின் மனைவி ஜானகியிடம், உடற்கூராய்வுக்காக ஒப்புதல் கையெழுத்தை காவல்துறையினர் பெற்றுள்ளனர். அப்போது மேலும் 4 பெண்கள் சீசிங் ராஜாவின் உடலுக்கு உரிமை கோரி உள்ளனர். தாங்களும் சீசிங் ராஜாவின் மனைவி என அவர்கள் ஒவ்வொருவரும் கூறியதால் பரபரப்பானது. சீசிங் ராஜா உடலுக்கு உரிமை கோரும் 4 துணைவிகளில் ஒரு பெண் வழக்கறிஞரும் உள்ளதாகத் தகவல், அவர் சட்டப்படி சீசிங் ராஜாவின் உடலுக்கு உரிமை கோரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு சீசிங் ராஜாவின் உடலை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சீசிங் ராஜா மீது போலீசார் சந்தேகித்து வரும் நிலையில், செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சீசிங் ராஜாவை போஸ்டர் ஒட்டி போலீசார் தேடி வந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா மீது சந்தேகம் வர, காவல்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டனர்.
ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜா, தனக்கென தனிக் கூலிப்படை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். சென்னையில் மட்டுமின்றி ஆந்திராவில் அவர் மீது கொலை வழக்குகள் இருக்கின்றன. இதற்காக பல முறை சிறை சென்றுள்ளார். 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல ரௌடிகள் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், சீசிங் ராஜாவையும் காவல்துறை குறி வைத்தனர். சீசிங் ராஜா தப்பிய நிலையில், சீசிங் ராஜாவின் கூட்டாளியான சஜித்தை தனிப்படை காவலர்கள் சில வாரங்க்ளுக்கு முன்பு கைது செய்த நிலையில், சீசிங் ராஜா புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டி அவரை காவல்துறை தரப்பில் தேடி வந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு சுவரொட்டி தாம்பரம் மாநகரக் காவல்துறை
சார்பில் சேலையூர், தாம்பரம் உட்பட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டது.
அந்த சுவரொட்டியில், "பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், இந்த அறிவிப்பில் உள்ள புகைப்படத்தில் காணப்படும் கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற சீசிங் ராஜா (வயது 49), என்பவர் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் குற்றவாளி ஆவார்.
அந்த வழக்கில் முறைப்படி அழைப்பாணை வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். நீதிமன்றத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற வழக்கில் 2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி ராஜா என்கிற சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் சேலையூர் காவல் ஆய்வாளர் 98401 25656, காவல் ஆய்வாளர் அலுவலகம் 94981 00157 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது ரூபாய்.100 கோடி கேட்டு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி தலைமையைத் தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் மாயாவதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாநில காவல்துறை நடவடிக்கை எடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 28 பேரை கைது செய்துள்ளது . தற்போது இரண்டு ரௌடிகள் என்கவுண்டரில் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்.
இந்த வழக்கில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைதாகி இருப்பதால் அரசியல் ரீதியாகவும் பலரது தலைகளை உருட்டுகிறது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஸ்வத்தாமன் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை பதவியில் இருந்தும் கட்சி நீக்கி இருக்கிறது. இதற்கிடையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது பகுஜன் சமாஜ் கட்சி புகார் தெரிவித்துள்ளதால். அவரையும் விசாரிக்க வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் என்பவர் டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த கடிதம் வெளியான போது டெல்லி காங்கிரஸ் பார்வையாளர்கள் அஜய்குமார், சூரஜ்ஹெக்டே ஆகியோர் சென்னையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இருக்கிறார்கள். இதுபற்றி அவர்களும் விசாரித்து டெல்லி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மாநில செயற்குழு கூட்டம் நடந்த போது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக மாநில காங்கிரஸ் கமிட்டி கூறி இருக்கிறது. தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி மீது ரூபாய்.100 கோடி கேட்டு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.
இதற்கிடையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கூட்டணிக் கட்சியான திமுக தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் செல்வப்பெருந்தகை சந்தித்து விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.செல்வப்பெருந்தகை மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அந்த கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது தலைவர் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்து இருப்பது துரதிருஷ்டவசமானது. கட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் உருவாகும். எனவே அவர் பதவியில் தொடர்வது நல்லதல்ல என்று தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக டெல்லி தலைமையும் தமிழ்நாடு நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்களாம்.
கருத்துகள்