யூடியூப்பர் சவுக்கு சங்கர் விடுதலை - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அறிவிப்பு
பல கட்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு இன்று - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு - எங்கள் மாநிலத்தின் ரிவ்யு கமிட்டி முடிவு செய்து விட்டது - அவரை விடுவிக்கிறோம் .. என சொல்லியது . அவரை விடுதலை செய்ய சொல்லி அவரது தாயார் போட்ட மனு தள்ளுபடி ஆகி -
ஆலோசனைக் குழுவின் கருத்தைத் தொடர்ந்து சவுக்கு சங்கரின் காவல் உத்தரவை இன்று ரத்து செய்ததாக தமிழ்நாடு அரசின் அறிக்கையை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வு பதிவு செய்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோகத்கி மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர், தடுப்புக்காவல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஆலோசனைக் குழு கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.
சவுக்கு சங்கர் மீதான குற்றங்கள் என அரசு நீதிமன்றத்தில் சொல்லியது ..
'ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி, ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கருக்கு, மாலை 5 மணிக்கு சிறையில் இருந்து வெளிவரத் திட்டமிடப்பட்டது என்பது மனுதாரரின் வழக்கு.
அதே நாளில் மாலை 5:45 மணிக்கு, அவர் 4 மாதங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்ற என்டிபிஎஸ் வழக்கில் மீண்டும் காலவரையின்றி காவலில் வைக்கப்பட்டார். மனுதாரர் தமிழ்நாடு 'குண்டர்கள்' தடுப்புச் சட்டம் 1982 (தமிழ்நாடு கொள்ளையடிப்பவர்கள், போதைப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், ஒழுக்கக்கேடான போக்குவரத்து குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், சேரி கொள்ளையர்களின் செயல்கள் மற்றும் வீடியோ) ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் 30, ஆம் தேதி 2024 அன்று RedPix 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலின் போது பெண் காவல் பணியாளர்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைக் கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மே மாதம் 4, ஆம் தேதி 2024 அன்று சுதந்திரச் செயல்பாட்டாளரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மொத்தம் 16 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கருக்கு எதிராக, அனைத்தும் ஒரே நேர்காணலில் இருந்து பேசப்பட்டவைக்காக எதிராக போடப்பட்டவை
ஒரே நேரத்தில் ஒரே விஷயத்திற்காக பல ஊர்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ததாலும் குண்டர் சட்டம் பாயும் போல ..
ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் என பல மூத்த சட்ட வல்லுநர்கள் பேசும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று செப்டம்பர் .25 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசு சார்பில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை, குண்டர் தடுப்பு சட்ட அறிவுரைக் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவுரைக் குழுவின் பரிந்துரையின் படி அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, சவுக்கு சங்கரை 2-வது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை யெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்." கோயம்புத்தூர் சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள்..! " மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன்..! சிறையில் இருந்து விடுதலையான பின் யூடியூப்பர் சவுக்கு சங்கர் செய்தியாளர் சந்திப்பு
கருத்துகள்