போலி விஷா தயாரித்து விற்பனை செய்த கும்பல் கைது
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் இத்தாலி நாட்டிற்குச் செல்வதற்காக போலியான ஸ்விட்சர்லாந்து விஷா வைத்திருப்பதை டில்லி காவல் துறையினர் கண்டு பிடித்தனர். அது குறித்து அவரிடம் விசாரணை செய்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தன் கிராம மக்கள் இந்த முறையின் மூலம் தான் வெளி நாடுகளுக்குச் செல்வதாகத் தெரிவித்தார். இதை ஆசிப் அலி என்பவரிடம் பெற்றதாகவும் கூறினார். அதனையடுத்து போலியான விஷா தயாரித்துத் தரும் ஆசிப் அலியை கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட சிவ கவுதம், பல்பீர் சிங், ஜஸ்விந்தர் சிங், ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பல உலக நாடுகளுக்குச் செல்வதற்காக போலியான விஷா வழங்கும் முகவராக டில்லி திலக்நகரில் மனோஜ் மோங்கா என்பவர் இயக்கி வந்தது தெரியவந்ததை அடுத்து அவரையும் கைது செய்தனர் விஷா தயாரிப்புக்கான கிராபிக் டிசைன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வொரு மாதமும் 30 முதல் 60 விஷாக்கள் வரை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் 20 நிமிடங்களில் விஷா ஸ்டிக்கர் தயாரிக்கப்பட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு விஷாவும் 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
வெளிநாடு செல்வதற்கு காத்திருக்கும் மக்களை சிக்னல் டெலிகிராம், வாட்ஸ்ஆப் போன்றவற்றின் மூலமாக தொடர்பு கொண்டு வந்துள்ளனர்.
இந்தச்சம்பவம் குறித்து டில்லி காவல்துறை ஆணையர் மற்றும் டில்லி விமானநிலைய இம்மிக்ரேஷன் அலுவலர் உஷா ரங்ராணி கூறுகையில் இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 16 நேபாள நாட்டின் கடவுச்சீட்டுகள், இரண்டு இந்தியா கடவுச்சீட்டுகள் ,30 விஷா ஸ்டிக்கர்கள், மற்றும் 23 விஷா ஸ்டாம்புகள், பிரிண்டர்கள், சாய இயந்திரங்கள், லேமினேஷன் ஷீட், யுவிமெஷின், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கருத்துகள்