சென்னையில் உள்ள நடிகர் கௌண்டமணி வல்லகுந்தபுரம், உடுமலைப்பேட்டை வட்டம் பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்போதைய திருப்பூர் மாவட்டம் பூர்வீகம் கௌண்டமணியும் அவர் மனைவி சாந்தியும் முதலீடு செய்து அவர்கள் மகள் ரமணி பாய் பெயரில் 1996-ஆம் ஆண்டில் ஒரு நிலத்தை வாங்கி வணிக வளாகம் கட்டுவதற்காக
அபிராமி ஃபவுண்டேஷன் எனும் கட்டுமான நிறுவனத்துடன் 2001 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்ததில் கட்டடத்தை 3 கோடியே 58 லட்சத்திற்குக் கட்டித் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் நடிகர் கௌண்டமணி பேசிய தொகையில் 50 சதவீதம் உடனடியாகக் கொடுத்துவிடவே கட்டுமான வேலைகள் தொடங்கி விடுகிறது. அப்போது நடிகர் கௌண்டமணி பிரபலமான நேரம் படப்பிடிப்பிலிருந்தார். எனவே அடிக்கடி போய் அவரால் கட்டிட வேலைகளைப் பார்க்க முடியாததால் ஒப்பந்தம் செய்த நிறுவனம் கட்டிடப் பணிக்குப் பணம் போதவில்லை எனக் கேட்டதால் கௌண்டமணி மேலும் 25 சதம் சேர்த்து 75 சதவீதம் தொகையைக் கொடுத்து விடுகிறார்.
இருந்தும் மறுபடியும் பணங்களைக் கேட்டுத் தொந்தரவு செய்ததால், ஒருமுறை நேரில் நடைபெற்றுள்ள பணிகளைப் பார்க்கலாம் என நடிகர் கௌண்டமணி நேரில் சென்று ஆய்வு செய்த போது வேலை கால்வாசி கூட நடைபெறவில்லை என்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைய.
கொடுத்த பணத்திற்கும் நடந்துள்ள வேலைக்கும் பொருந்திப் போகவில்லை என ஒரு புகாரைச் சொல்லவே தகராறு எழுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் இனிமேல் பணிகளைச் செய்யவேண்டாம். செய்தவரை போதும். வேறு ஆட்களை வைத்து முடித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்ட ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாகவும் கௌண்டமணி சொல்கிறார். அதற்கு கட்டுமான நிறுவனத்தின் பிரம்மநாயகம் ஒப்பந்தம் செய்த முழுப் பணத்தைக் கொடுத்தால் தான் வெளியேறுவேன் என்கிறார். அதனால் 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் கௌண்டமணியின் 20 ஆண்டு கால நண்பரான வழக்கறிஞர் சசிகுமார்
மூலம் வழக்கு தாக்கலான நிலையில். அதற்காக விசாரணையில் சில காலம் கழித்து கௌண்டமணிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்ததை எதிர்த்து எதிர்த்தரப்பு சார்பில் மேல்முறையீடு 2011 ஆம் ஆண்டு செய்யப்பட்டது தொடர்ந்து நடந்த வழக்கில் 2021 ஆம் ஆண்டில் நடிகர் கௌண்டமணிக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது. இந்த விசாரணையின் போது கட்டுமான நிறுவனம் ரூ 61 லட்சம் கூடுதலாக வாங்கியது தெரிந்ததனால், நிலத்தையும் குறிப்பிட்ட தொகையையும் நடிகர் கௌண்டமணிக்குத் திரும்ப அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது
அந்த உத்தரவை அமல்படுத்த காவல்துறையினர் உதவியில் நிலத்தை மீட்கச் சென்ற போது எதிர்த்தரப்பு தகராறு செய்கிறது. அதற்கு காவல்துறை ஒத்துழைப்பு இல்லை அதனால் நடிகர் கௌண்டமணி தரப்பு திரும்பி விட்டது. அதன் பின்னர் மீண்டும் இடைக்காலத் தடை பெற்றார் கட்டுமான நிறுவனத்தின் பிரம்மநாயகம். உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்குப் போனது. அங்கே சிறப்பு விடுப்பு மனுவை 2024 ஆம் ஆண்டு தாக்கல் செய்த நிலையில். விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து கவுண்டமணிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இழப்பீடு ரூபாயை உடனடியாக அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த நிலையில் மீண்டும் காவல்துறை உதவியுடன் நிலத்தை மீட்கவும் எதிர்த்தரப்பு இடத்திற்கு உள்ளே செல்லவும் அனுமதி மறுத்தால் அந்தத் தடையை உடைத்து சொத்தை பறிமுதல் செய்து ஒப்படைக்க அதிகாரம் வழங்கியது நீதிமன்றம். மேற்கொண்டு ஏதேனும் பிரச்சினை செய்தால், அந்தத் தரப்பைக் கைது செய்ய அதிகாரம் அளித்தது. நடிப்பு வாழ்க்கையுடன் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடத்திய நடிகர் கௌண்டமணியின் வாழ்நாளில் இது ஒரு நீண்ட சட்டப் போராட்டமாகும். இதன் மூலம் சொத்தை மீட்டதுடன் கட்டுமான நிறுவனம் கூடுதலாக வாங்கிய 60 லட்சம் ரூபாயையும் திரும்ப அளிக்க வேண்டிய நிலையில் அதற்கு இழப்பீடாக மாதம் 1 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் வட்டியும் வழங்க வேண்டுமென்று தீர்ப்பு. வட்டித் தொகை 2011 ஆம் ஆண்டு முதல் தீர்ப்பு உறுதியான மாதம் வரை வழங்கப்பட வேண்டும்.
அதன் படி வட்டித் தொகை 1கோடியே 80 லட்ச ரூபாயாகும். இந்த இழப்பீட்டை கட்டுமான நிறுவனம் தரவில்லை என்றால் உரிமையாளர் பிரம்மநாயகம் சொத்துகளை ஜப்தி செய்வதற்கு முறையிடலாம். அதுவும் தீர்ப்பிலுள்ளது. அதற்கான சட்ட நடவடிக்கைகள் இனித் தொடங்க உள்ளதாக நடிகர் கௌண்டமணி இதுவரை மன உளைச்சல் அடைந்தது உண்மை அவர் பிரபலமாக இருந்தாலும் வழக்கு வழக்கில் 20 ஆண்டுகள் போராட்டம் நடத்தினார் நீதி கிடைக்குமா என இதைப் பார்க்கக் கூடாது. சட்டப்படி அந்த வழக்கு விசாரணையை வைத்தே அதன் கால வரம்பு அமையும். எதிர்த்தரப்பு இந்த வழக்கை கட்டுமான நிறுவனம் காலம் கடத்த வேண்டிச் செய்த சதியால் இவ்வளவு ஆண்டுகளானது.
கருத்துகள்