ரூபாய் 2000 லஞ்சம் வாங்கிய காவல் சார்பு ஆய்வாளருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் ரூபாய் 2000 லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதித்தது
சிவகங்கை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. 2010 ஆம் ஆண்டு புகார் கொடுக்க வந்தவரிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, காளையார்கோவில் காவல்நிலையத்தில் பணிசெய்த சார்பு ஆய்வாளர் செங்குட்டுவன் லஞ்சம் பெற்ற கையுடன் பிடிபட்டார் பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு
தற்போது அவரது பணிக்காலம் முடிந்த நிலையில், வழக்கு நடந்து வந்தது நேற்று திங்கட்கிழமை அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது,
இரண்டு சக்கர வாகனத்தை விடுவிக்க ரூபாய் இரண்டாயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல்துறை சார்பு ஆய்வாளருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
அதன் விபரம் வருமாறு: -விளம்பரம்-
-விளம்பரம்-சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் தாலுகா அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த அன்பு மலைக்கண்ணன் (என்ற) சாதுமங்கலசாமியின் பேத்தியான நவபாரதிக்கும், அவரது கணவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது அது குறித்து
2010 -ஆம் ஆண்டு காளையாா்கோவில் காவல் நிலையத்தில் தனது பேத்திக்கு சீதனமாகக் கொடுத்த இரண்டு சக்கர வாகனத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளா் செங்குட்டுவனிடம் சாதுமங்கலசாமி புகாா் கொடுத்தாா்.
அப்போது இரண்டு சக்கர வாகனத்தை விடுவிக்க காவல் சார்பு ஆய்வாளா் செங்குட்டுவன் ரூபாய்.2,000 லஞ்சமாகக் கேட்ட நிலையில் சாதுமங்கலசாமி, கொடுக்க விரும்பாத காரணத்தால் அது குறித்து சிவகங்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் அளித்தாா். அதன் படி பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய்.2,000 பணத் தாள்களை
சாதுமங்கலசாமியிடம் வாங்கிய பிறகு திரும்பி அரசு சாட்சிகள் முன்னிலையில் சரிபார்ப்பு செய்து கொடுத்தனுப்பினா். அவா் சாட்சிகள் முன்னிலையில் அந்தப் பணத்தை காவல் ஆய்வாளர் செங்குட்டுவனிடம் கொடுத்த போது,
அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் துணைக் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் ஆய்வாளர் ராஜா ஆகியோர் அவரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்து, வழக்குப்பதிவு செய்தனா். விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சிவகங்கை மாவட்டஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் முரளி, ரூபாய் 2000 லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளா் செங்குட்டுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய்.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்