காற்றாலையைப் புதுப்பித்தாலோ, ஆயுள் நீட்டிப்புச் செய்தாலோ, மீண்டும் மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய் கட்டணம்
தமிழ்நாட்டில், 1986 ஆம் ஆண்டு முதல் காற்றாலைகள் மூலம் மின் நிலையங்கள் நிறுவப்பட்டு செயல்படுகின்றன.
மரபு சாரா எரிசக்தி துறை அமைச்சராக தமிழ்நாடு சார்ந்த இரண்டு அமைச்சர்கள் இருந்த. போது அவை எண்ணிக்கையில் அதிகரித்தது. 2014 ஜூன் மாதம், 30 ஆம் தேதி நிலவரப்படி மாநிலத்தில், 10,790 மெகாவாட் மின்சாரத் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு காற்றாலையும், 600 கிலோ வாட் வரையிலான திறனில் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது, ஒரு காற்றாலை, இரண்டு மெகா வாட் திறனில் அமைக்கப்படுகிறதனால், பழைய காற்றாலைக்குப் பதில் புதிதாக அமைக்கவும், திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ஆயுளை நீட்டிக்கவும், 'தமிழ்நாடு காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்புக் கொள்கை - 2024 என அரசு சமீபத்தில் வெளியிட்ட கொள்கையின்படி, 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலைக்குப் பதிலாக, புதிதாக அமைக்கலாம்.
காற்றாலையைப் புதுப்பிக்க வளர்ச்சிக் கட்டணமாக, 1 மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய், மின் வாரியத்திற்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இதற்கு, காற்றாலை மின் நிலையம் அமைத்தவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதனால், 20 ஆண்டுகளுக்கு மேலான, 3,000 மெகா வாட் மின்சாரம் அளவுக்கான காற்றாலைகளைப் புதுப்பிக்க வேண்டிய நிலையில், இதுவரை, 25 மெகா வாட்டிற்கு தான் மின் வாரியத்திடம் விண்ணப்பங்கள் வந்துள்ளது குறித்து, காற்றாலைகளை அதிகம் அமைத்துள்ள தமிழ்நாடு நுாற்பாலைகள் சங்கத்தின் முதன்மை ஆலோசகரான வெங்கடாசலம் தெரிவித்தது:
நடைமுறைக்கு ஏற்றதாக கொள்கையில் முடிவுகள் எடுக்கப்படவில்லை. காற்றாலையை ஏற்கனவே நிறுவிய போது, வளர்ச்சிக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்தக் காற்றலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் இன்று வரை, மின் வழித்தடத்தில் எடுத்து செல்லப்படுகிறது.
இந்தச் சூழலில், காற்றாலையை புதுப்பித்தாலோ, ஆயுள் நீட்டிப்புச் செய்தாலோ, மீண்டும் மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனச் சொல்வது ஏற்புடையதல்ல.
காற்றாலையை புதுப்பித்தல் என்பது சட்டப்பூர்வமாகச் செயல்படுத்தப்பட வேண்டிய கொள்கையல்ல. இது, உற்பத்தியாளர்களின் தனிப்பட்ட முடிவு.
காற்றாலையை புதுப்பித்தால், அந்த காற்றாலைகளிலிருந்து ஏற்கனவே வழங்கியதுடன், கூடுதலாக, 25 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
காற்றாலை ஆயுட் காலம் என்பது, இதுவரை சட்டப்பூர்வமாக நிர்ணயம் செய்யப்படவில்லை. அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் வாங்குவதற்கு மட்டுமே, 20 முதல் 25 ஆண்டுகள் வரை என நிர்ணயிக்கப்பட்டது.
புதிதாக வந்த கொள்கையின் படி, 20 ஆண்டுகள் முடிந்த உடன் காற்றாலையை மாற்ற வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்பது அதிர்ச்சி தரக்கூடியது.
எனத் தெரிவித்தார்.
கருத்துகள்