ஆட்டிசம் விழிப்புணர்வுக்கு இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவில் இராமேஸ்வரம் வரை பாக்ஜலசந்தி கடலில் லக்ஷய் எனும் சிறுவன்
நேற்று நீந்திக் கடந்தார். சென்னை - துரைப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா மகன் லக்ஷய் (வயது 12). ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவரானாலும் நீச்சல் பயிற்சியை கற்றுத் தேர்ந்த நிலையில். பல்வேறு நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையின் தலைமன்னாரிருந்து இந்தியாவில் இராமேஸ்வரம் வரை 31 நாட்டிக்கல் கடல் மைல் (50 கி.மீ) தொலைவிலான பாக் ஜலசந்தி கடல் பரப்பை நீந்துவதற்காக இந்திய அரசின் வெளியுறவுத்துறை, இலங்கையின் இந்தியத் தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடமும் அனுமதி கோரியிருந்த நிலையில். அனுமதி கிடைத்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை,
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகுகளில் லக்ஷய், அவரது பெற்றோர், மற்றும் பயிற்சியாளர்கள் சதீஷ், செல்வம், ஒருங்கிணைப்பாளர் ரோஜர், மருத்துவக் குழுவினர், மீனவர்கள் உள்ளிட்ட 22 பேர் தலைமன்னாருக்குப் புறப்பட்டனர். செவ்வாய்க்கிழமை மாலை 5:05 மணியளவில் தலைமன்னாரிலிருந்து லக்ஷய் நீந்தத் துவங்கி, புதன்கிழமை மதியம் 3.30 மணியளவில் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்பகுதிக்கு வந்தடைந்தார்.
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வுக்காக தலைமன்னார் - இராமேஸ்வரம் கடல் பரப்பை நீந்திக் கடந்த சிறுவன்
தொடர்ச்சியாக 22 மணி நேரம் 35 நிமிடங்களில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தினார். இதன் மூலம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை லக்ஷய் படைத்துள்ளார். இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீச்சல் இளைய வீரர் லக்ஷய்க்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
கருத்துகள்