ஜேஎம் பைனான்சியல் கிரெடிட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 42.99 சதவீதத்தை கையகப்படுத்த சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது
இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) (i) ஜேஎம் ஃபைனான்சியல் கிரெடிட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 42.99 சதவீதத்தை, ஜேஎம் ஃபைனான்சியல் நிறுவனம் கையகப்படுத்தவும், (ii) ஜேஎம் ஃபைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 71.79 சதவீதத்தை, ஜேஎம் ஃபைனான்சியல் கிரெடிட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த இணைப்பு ஒரே நேரத்தில் இரண்டு கையகப்படுத்துதல்களுக்கு வழிவகை செய்கிறது. (i) JM ஃபைனான்சியல் கிரெடிட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் (ஜெஎம்எஃப்சிஎஸ்எல்) மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 42.99 சதவீதத்தை, ஜெ எம் ஃபைனான்சியல் நிறுவனம் (ஜெஎம்எஃப்எல்) கையகப்படுத்துதல், (ii) ஜெ எம் பைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 71.79 சதவீதத்தை கையகப்படுத்துதல் ஆகியவை இதில் நடைபெறும்.
ஜெஎம்எஃப்எல் என்பது ஜெ எம் ஃபைனான்ஷியல் குரூப்பின் (ஜெஎம்எஃப்எல் குழுமம்) செயல்பாட்டு நிறுவனமாகும். இது அதன் சொந்த, துணை நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைந்த, பலவகைப்பட்ட நிதி சேவைகளை வழங்குகிறது. இது மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை போன்றவற்றில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.
கருத்துகள்