இராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர பிரகாஷ் சோனி காலமானார்.
நீதிபதி ராஜேந்திர பிரசாத் சோனிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார் அவருக்கு வயது 60.
நேற்றிரவு, நெஞ்சுவலி காரணமாக ஜோத்பூரிலுள்ள மருத்துவமனையில் நீதிபதி ராஜேந்திர பிரசாத் சோனி அனுமதிக்கப்பட்டார்.
ஜனவரி மாதம் 16 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டில் நீதிபதி ராஜேந்திர பிரசாத் சோனி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி ராஜேந்திர பிரசாத் சோனியை உயர்நீதிமன்ற நீதிபதியாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நியமிக்க பரிந்துரைத்தது.
அதற்கு முன், அவர் துங்கர்பூர், சிரோஹி, ஜலோர், உதய்பூர் மற்றும் கோட்டா மாவட்டங்களின் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றினார்.
நீதிபதி ராஜேந்திர பிரசாத் சோனி, உதய்பூர் மற்றும் ராஜ்சமந்தில் உள்ள மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் தலைமை அலுவலராகவும் பணியாற்றினார். உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் (நிர்வாகம்) ஆக பணியாற்றியுள்ளார் .
கருத்துகள்